எட்வேர்ட் சுனோவ்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வர்ட் சினோடென்
6 சூன் 2013 ஆங்காங்கில் சினோடன்
பிறப்புஎட்வர்ட் யோசப் ஸ்னோடென்
சூன் 21, 1983 (1983-06-21) (அகவை 40)[1]
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
பணிஅமைப்பு நிர்வாகி
பணியகம்பூஸ் அலன் அமில்ட்டன்[2] (ஜூன் 10, 2013 வரை)
அறியப்படுவதுஐக்கிய அமெரிக்க அரசின் கண்காணிப்பு சார்ந்த அதிமுக்கிய ரகசியங்களை வெளியிட்டமை
சொந்த ஊர்வில்மின்ங்டன், வட கரொலைனா மாநிலம்
குற்றச்செயல்அரசு சொத்தை திருடியது, தேசிய பாதுகாப்பு தகவல்களை அனுமதியற்ற முறையில் வெளியிட்டது மற்றும் பாதுகாக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களை அனுமதிக்கப்படாத நபர்க்கு வெளியிட்டது (ஜூன் 2013).

எட்வர்ட் யோசப் சினோடென் (Edward Snowden) (பிறப்பு: சூன் 21, 1983) என்பவர் ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையினதும் (National Security Agency (NSA)) நடுவண் ஒற்று முகமையினதும் ஒரு முன்னாள் ஒப்பந்த நுட்பவியலாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் சி.ஐ.ஏவில் பணிபுரிந்து, அமெரிக்க, பிரித்தானிய அரசுகளினால் தமது குடிமக்கள் மீதும் பிறநாட்டவர்கள், நாடுகள் மீது நடத்தப்படும் இரகசிய கடுங்கண்காணிப்புத் திட்டங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டார்.[3][4].

கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட், ஆப்பிள், முகநூல், டுவிட்டர் என்று பல வழிகளில் தனிநபர்கள் மற்றும் அரசாங்கங்கள் தகவல் பரிமாற்றம் செய்வதை அவர்களுக்குத் தெரியாமல் ஒற்றாடுவது கண்டு மனசாட்சிக்கு விரோதமான செயலாக அதைக் கருதியதால் உலகிற்கு வெளிப்படுத்தினார். அடிப்படை குடியுரிமைகளை, குறிப்பாக அந்தரங்க உரிமைகளை மதிக்காமல், அரசுகள் அத்துமீறி இந்த திட்டங்கள் முன்னெடுப்பதால் தாம் பொதுநலன் கருதி இத் தகவல்களை வெளியிட்டதாக சுனோவ்டன் கூறியுள்ளார்[5]. ஆனால், ஐக்கிய அமெரிக்க அரசு இவரை வேவுக் குற்றம் சாட்டி கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் பலவிதமான விமர்சனங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் ஆளானவர்[6][7].

அரசியல் புகலிடம்[தொகு]

2013 சூன் 23 ஆம் நாள் எட்வர்ட் சினோடன் ஆங்காங்கில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோ வந்து சேர்ந்தார். ஆனாலும், இவரிடம் முறையான நுழைவாணை ஏதும் இல்லாததால் இவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். இவரது அரசியல் தஞ்சக் கோரிக்கைகளைப் பல உலக நாடுகள் நிராகரித்து விட்டன. இறுதியில் 2013 ஆகத்து 1 இல் உருசியா இவருக்கு ஓராண்டு காலம் தங்குவதற்கு தற்காலிக வதிவிட உரிமையை வழங்கியுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ackerman, Spencer (June 10, 2013). "Edward Snowden failed in attempt to join US army's elite special forces unit". தி கார்டியன் (London). http://www.guardian.co.uk/world/2013/jun/10/edward-snowden-army-special-forces. பார்த்த நாள்: June 10, 2013. "The army did confirm Snowden's date of birth: June 21, 1983." 
  2. Greenwald, Glenn; MacAskill, Ewen; Poitras, Laura (June 10, 2013). "Edward Snowden: the whistleblower behind the NSA surveillance revelations". The Guardian (London). http://www.guardian.co.uk/world/2013/jun/09/edward-snowden-nsa-whistleblower-surveillance#start-of-comments. "The individual responsible for one of the most significant leaks in US political history is Edward Snowden, a 29-year-old former technical assistant for the CIA and current employee of the defence contractor Booz Allen Hamilton. Snowden has been working at the National Security Agency for the last four years as an employee of various outside contractors, including Booz Allen and Dell." 
  3. Gellman, Barton; Markon, Jerry (June 9, 2013). "Edward Snowden says motive behind leaks was to expose 'surveillance state'". The Washington Post. http://www.washingtonpost.com/politics/edward-snowden-says-motive-behind-leaks-was-to-expose-surveillance-state/2013/06/09/aa3f0804-d13b-11e2-a73e-826d299ff459_story.html?tid=pm_politics_pop. பார்த்த நாள்: June 10, 2013. 
  4. Gellman, Barton; Blake, Aaron; Miller, Greg (June 9, 2013). "Edward Snowden comes forward as source of NSA leaks". The Washington Post. http://www.washingtonpost.com/politics/intelligence-leaders-push-back-on-leakers-media/2013/06/09/fff80160-d122-11e2-a73e-826d299ff459_story.html. பார்த்த நாள்: June 10, 2013. 
  5. Code name ‘Verax’: Snowden, in exchanges with Post reporter, made clear he knew risks
  6. http://www.wired.com/2014/08/edward-snowden/
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-06. பார்க்கப்பட்ட நாள் 2014-09-05.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வேர்ட்_சுனோவ்டன்&oldid=3545636" இலிருந்து மீள்விக்கப்பட்டது