மேரி கென்னத் கெல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருட்சகோதரி மேரி கென்னத் கெல்லர் (1914?–1985) கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார்.[1][2] 1965ஆம் ஆண்டு விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் "Inductive Inference on Computer Generated Patterns." என்னும் தலைப்பின் கீழ் செய்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.[3]

அன்பின் சகோதரிகள் என்னும் கத்தோலிக்கத் துறவற சபையில் இணைந்து 1940ஆம் ஆண்டு தனது துறவற வாக்குறுதியினை அளித்தார்.[4] அதன் பின்னர் கணித அறிவியலில் இளங்கலையும் (B.S. in Mathematics), மேலும் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுகலையும் (M.S. in Mathematics and Physics) தேபால் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.[4] டார்த்மவுன்ட் கல்லூரியில் பயிலும் போது, அக்காலத்தில் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியதாகக் கருதப்பட்ட, கணினித் துறையில் பேசிக் நிரலாக்க மொழியினை உருவாக்க ஊதவினார்.[4]

1965ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பின், ஐயோவா கிளார்க் கல்லூரியில் கணினி அறிவியல் துறையினை நிறுவி அதன் இயக்குநராக இருபது ஆண்டுகளுக்குப் பதவி வகித்தார்.[5] இந்த கிளார்க் கல்லூரியில் இப்போது கெல்லர் கணினி மையம் மற்றும் தகவல் சேவை மையம், இவர் பெயரால் நிறுவப்பட்டு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பயிர்ச்சி அளிக்கின்றது.[6] இக்கல்லூரியில் இவரின் பெயர் கொண்டு, "Mary Kenneth Keller Computer Science Scholarship" கல்வி ஊக்கத்தொகை மாணாக்கருக்கு வழங்கப்படுகின்றது.[7]

கணினி அறிவியல் பற்றி இவர் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Women in Computing - Computing History Museum
  2. "UW-Madison Computer Science Ph.D.s Awarded, May 1965 - August 1970". பார்க்கப்பட்ட நாள் 2010-11-08.
  3. http://research.cs.wisc.edu/includes/textfiles/phds.65-70.txt
  4. 4.0 4.1 4.2 Powered by Google Docs
  5. "About - National Women's History Museum - NWHM". Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2013-05-28.
  6. Computer Center : Clarke University
  7. Mary Kenneth Keller Computer Science Scholarship - Clarke University Scholarships
  8. KELLER, Mary Kenneth - Encyclopedia Dubuque
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_கென்னத்_கெல்லர்&oldid=3591303" இலிருந்து மீள்விக்கப்பட்டது