விக்கிப்பீடியா:ஏப்பிரல் 29, 2013 வவுனியா தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழும்பு தமிழ் ஆவண மாநாடு 2013 ஐ ஒட்டியதாக விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை மேற்கொள்ளல் தொடர்பாக ஆலமரத்தடியில் நடந்த உரையாடலின் படி கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை நடந்தது.

இடம், திகதி, நேரம்[தொகு]

பங்குபெற்றவர்கள்[தொகு]

பங்குபெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள்
  • வவுனியா வளாக மாணவர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்கிப்பீடியர்கள்[தொகு]

நிகழ்ச்சி நிரல்[தொகு]

கணினி ஆய்வகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்
  • கட்டற்ற உள்ளடக்கம், கட்டற்ற கலைக்களஞ்சியம் அறிமுகம் - மு. மயூரன்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் உலாவுதல், கட்டுரைகள் உருவாக்கல், பயனர் சமூக அறிமுகம் - இரவி.

பட்டறையை ஒழுங்குபடுத்தல் - பணிகள்[தொகு]

  • மண்டப மற்றும் ஒழுங்குகள் - வவுனியா வளாகம்

நிகழ்ச்சிக் குறிப்புகள்[தொகு]

மயூரன் பேசுகிறார்
  • சஞ்சீவி சிவகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க, வவுனியா வளாகத்தின் முதுநிலை உதவிப் பதிவாளரான திரு. கணேசலிங்கம் அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வவுனியா சென்று இறங்கியது முதல், தங்குவதற்கான இடம், போக்குவரத்து, உணவு, நிகழ்ச்சி நடத்துவதற்கான கணினி ஆய்வகம் / உரையாற்றுவதற்கான அரங்கம் ஆகியவற்றுக்குச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவருக்கு முதற்கண் எமது நன்றி !
  • முதலில் அங்குள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான அறிமுகமாக கணினி ஆய்வகத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கினோம். ஆனால், சிறிது நேரத்திலேயே மாணவர்களும் இணைந்து பெருங்கூட்டமானதால், கலையரங்குக்கு நிகழ்ச்சியை மாற்றினோம். இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மாணவிகள்.
இரவி பேசுகிறார்.
  • Data card கொண்டு நேரடியாக விக்கிப்பீடியா பக்கங்களில் உலாவிக் காட்டி விளக்கத்தை அளித்தோம். வவுனியா, இலங்கை சார்ந்த உள்ளடக்கங்கள் பெருமளவு இருந்தது கலந்து கொண்டோரின் கவனத்தை ஈர்த்தது.
  • கலந்து கொண்ட மாணவர் ஒருவரின் பாடசாலையைப் பற்றிய கட்டுரையை துவக்கிக் காட்டி விக்கிப்பீடியாவைப் பற்றி விளக்கினோம்.
  • பள்ளி / கல்லூரி / பல்கலைச் சூழலில் நடத்தப்படும் இது போன்ற பட்டறைகளில் சற்று இறுக்கம் நிலவுவது போல் தோன்றுகிறது. உடனடி விளைவுகள் எதிர்பார்க்க முடியாது என்றாலும், யாராவது என்றாவது ஒரு நாள் விக்கிப்பீடியா பக்கம் வந்து சேர வாய்ப்பிலை என்று சொல்ல முடியாது :) உடனடி விளைவுகளைக் காட்டிலும், விக்கிப்பீடியா போன்ற ஒரு பரவலர் இயக்கம், மரபார்ந்த கல்விச் சூழல்களில் முறையான அறிமுகம் பெற முடிகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
  • கொழும்பில் உள்ள மாணவர்களுக்கும் இவர்களுக்கும் பல வேறுபாடுகளைக் காண முடிந்தது. பலர் கணினி, இணையத்தைப் பயன்படுத்தாதவர்களாக இருந்தார்கள்.
  • இது போன்ற பட்டறைகள் நடத்தச் செல்வோர், முன்கூட்டியே விக்கிப்பீடியாவின் முக்கிய பக்கங்கள், பட்டறைக்குத் தொடர்புடைய பக்கங்களின் திரைக்காட்சிகளை எடுத்து வைத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஒரு வேளை, இணைய இணைப்பு சொதப்பினாலும், இந்த திரைக்காட்சிகளைக் கொண்டு பட்டறையை நடத்த முடியும்.