ஆடாசிட்டி (ஒலித் தொகுப்புக் கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடாசிட்டி
உருவாக்குனர்ஆடாசிட்டி உருவாக்கக் குழு
தொடக்க வெளியீடுமே 28, 2000; 22 ஆண்டுகள்
மொழிசி சி++
தளம்யுனிக்ஸ், Mac OS X, மைக்ரோசாப்ட் வின்டோஸ்
கிடைக்கும் மொழிபல்மொழி; தமிழிலும் உள்ளது
உருவாக்க நிலைசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது
மென்பொருள் வகைமைஒளி தொகுப்பு கருவி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்https://www.audacityteam.org

ஆடாசிட்டி ஒலித் தொகுப்புக் கருவி (Audacity audio editor) இலவசமாக பதிவிறக்கக்கூடிய திற மூல மென்பொருளாகும். இது விண்டோசு, மேக், லினக்சு போன்ற இயங்குதளங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு ஒலிக் கோப்பு வடிவங்களை கலக்கச் செய்தல், ஒலிப் பதிவு, இரைச்சல் நீக்கம் ஆகியனவற்றை இதன் மூலம் மேற்கொள்ளலாம். ஒலியின் பல்வேறு காரணிகளை மாற்றியமைத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

முதன் முதல் 1999ஆம் ஆண்டு இறுதியில் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டோமினிக் மாச்சோனி என்பவராலும் ரோசர் டானென்பர்க் என்பவராலும் தொடங்கப்பட்டது. 28 மே 2008, 0.8 பதிப்பை வெளியிட்டார்கள்

10 அக்டோபர் 2011 வரை சோர்சுபோர்ச்சு தளத்தில் 76.5 மில்லியன் தரவிறக்கத்துடன் 11வது புகழ்பெற்ற மென்பொருளாக அத்தளத்தில் இருந்தது. சிறந்த பல் ஊடக திட்டத்துக்கு வழங்கப்படும் சோர்சுபோர்ச்சு சமூகத்தின் தேர்வாக 2007 & 2009 ஆண்டுகளில் அடாசிட்டி இருந்தது. மார்ச்சு 2015 முதல் போசுஅப் என்னும் தளத்தில் செயல்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "audacity/audacity". June 14, 2022. Archived from the original on June 14, 2022. பார்க்கப்பட்ட நாள் June 14, 2022 – via GitHub.
  2. "About Audacity". audacityteam.org. Archived from the original on June 18, 2015. பார்க்கப்பட்ட நாள் February 19, 2012.
  3. FossHub.com. "Download Audacity". Archived from the original on January 22, 2017. பார்க்கப்பட்ட நாள் January 23, 2017.