சஞ்சய் சுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஞ்சய் சுப்பிரமணியம் (பிறப்பு: மே 21, 1961) ஒரு இந்தியவியலாளர், வரலாற்றாளர். இந்தியாவை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குடும்பம்[தொகு]

இவரது தந்தை கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக பணியாற்றிவர். இவரது அண்ணன் சுப்பிரமணியம் செயசங்கர் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சவரையில் இந்திய வெளியுறவு அமைச்சராக உள்ளார்.

படிப்பு மற்றும் பணிகள்[தொகு]

  • இளங்கலை (பொருளாதாரம்) மற்றும் முதுநிலை (பொருளாதாரம்) படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். 1987 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • பொருளாதார வரலாறு பிரிவில் பேராசிரியராக 1993-1995 ஆம் ஆண்டு வரை டெல்லி பல்கலைகழகத்தில் பணி புரிந்தார்.
  • பொருளாதார மற்றும் சமூக வரலாறு துறையின் இயக்குனராக பிரெஞ்சு நாட்டில் 1995 -2002 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார்.
  • 2002 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சார துறையின் இயக்குனராக பணிபுரிந்தார்
  • பின்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தெற்காசியவியல் இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

விருதுகள்[தொகு]

  • 2012 ஆம் ஆண்டுக்கான இன்போசிஸ் விருது பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_சுப்ரமணியம்&oldid=3312380" இலிருந்து மீள்விக்கப்பட்டது