பொரி உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொரி உள்ளான்
மங்கலசோடி ஈரநிலங்களில், சிலிகா ஏரி, இந்தியா.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
துணைவகுப்பு: Neornithes
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Tringa
இனம்: T. glareola
இருசொற் பெயரீடு
Tringa glareola
லின்னேயசு, 1758
வேறு பெயர்கள்

Rhyacophilus glareola (L. 1758)

Tringa glareola

பொரி உள்ளான்[2] எனப்படும் பொரி மண்கொத்தி [3](Wood Sandpiper - Tringa glareola) ஒரு வலசை போகும் டிரிங்கா வகை உள்ளான். இவை நீளக் கால்கள் கொண்ட நடுத்தர அளவுள்ள கரைப்பறவைகளாகும். நன்னீர் ஏரிகளிலும் சதுப்புநிலங்களிலும் (ஈரநிலங்கள்) இவற்றைக் காணலாம். ஒரே உயிரியல் குடும்பத்தைச் சார்ந்த பவளக்காலியின் மிக நெருங்கிய உறவாக இப்பறவை உள்ளது.

உடல் தோற்றம்[தொகு]

பரத்பூரில்
  • 18 செ.மீ- 21 செ.மீ நீளமுள்ளது.
  • (வெண்)புருவம் நீண்டு காணப்படும்.
  • முதிர்ந்த பறவையின் இறக்கையின் அடர்பழுப்பு நிற வெளிப்பகுதியிலும் தொண்டை, மார்புப் பகுதிகளிலும் தெளிவான புள்ளிகள் காணப்படும். (முதிர்வடையாத பறவையில் பொரிகள் தெளிவாக இராது).
  • பறக்கும்போது தென்படும் இறக்கையின் உள்பகுதி வெளிர் நிறத்திலிருக்கும்.[4]
  • கால்கள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும் [5].

ஆற்று உள்ளான் வேறுபாடு[தொகு]

பொதுவில் ஒன்று போலவே தென்படும் ஆற்று உள்ளானிலிருந்து (Green Sandpiper - Tringa ochropus) பொரி உள்ளானை வேறுபடுத்திக் காட்ட பின்வரும் களக்குறிப்புகள் உதவும்:

  • (வெண்)புருவம் சிறியதாக கண்ணிற்கு முன் மட்டும் காணப்படும்; கண்ணின் பின்புறம் புருவம் இராது[6].
  • இறக்கையின் உள்பகுதி கருமையாக இருக்கும்.
  • இறக்கை பொரி உள்ளானை விடக் கருமையாகவும் (புள்ளிகள்/பொரிகள் தெளிவாக இராது) உடல் வெண்ணிறமாகவும் இருக்கும்.
  • பறக்கும்போது இறக்கையின் கருமையான உள்பகுதி தென்படும்.[7]

கள இயல்புகள்[தொகு]

மற்ற கரைப்பறவைகளை விட அதிகம் கூடிவாழ்கின்ற இயல்புடையது. சேற்றிலும் குறைவான நீருள்ள ஈரநிலங்களிலும் அலகால் பெருக்கியபடி உணவைப் பொறுக்கி எடுக்கும். பனிக்கால உறைவிடங்களிலும் உரிமையை நிலைநாட்டுவதில் சண்டையிடும் குணமுடையது.[8]

பரவல்[தொகு]

இந்தியா முழுவதும் பனிக்காலத்தில் காணப்படும். ஆகஸ்டில் வந்து ஏப்ரலில் தான் வலசை போகும்.[8]

உணவு[தொகு]

மெல்லுடலிகள், பூச்சிகள், புழுக்கள்.

கூப்பாடு[தொகு]

மெல்லிய சிஃப்-இஃப்-இஃப் (chiff-if-if) குரல் தருகிறது.

காணொலிகள்[தொகு]

  • பிரித்தனிய அறக்கட்டளையின் BTO-YouTube காணொலி-ஆற்று உள்ளானையும் பொரி உள்ளானையும் வேறுபடுத்துதல்-[1]

கலைச்சொற்கள்[தொகு]

வலசை = migration; ஈரநிலம் = wetland; கரைப்பறவை = shore bird (or wader); முதிர்ந்த = adult; அடர்பழுப்பு = dark brown; புருவம் = supercilium; மெல்லுடலி = mollusc;

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Tringa glareola". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. BIRDS OF TAMILNADU-K. RATNAM-Bird No. 96
  3. தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 100:2 - BNHS (2005)
  4. planetofbirds.com
  5. MigrantWatch.in
  6. MigrantWatch.in
  7. planetofbirds.com
  8. 8.0 8.1 BIRDS OF TAMILNADU - K. RATNAM - Bird# 96

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tringa glareola
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரி_உள்ளான்&oldid=3767259" இலிருந்து மீள்விக்கப்பட்டது