கடல் படிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல் படிவுகள் (marine sediments அல்லது pelagic sediments) என்பன இயற்கையாகக் காணப்படும் மூலப்பொருள்கள் புவித் தட்பவெப்பநிலை மாற்றங்கள் மற்றும் அரிப்பு காரணமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு காற்று, பனி, மற்றும் நீர் மூலம் கொண்டு செல்லப்பட்டு உருவாக்கப்படுகின்றன. புவி வரலாறு பற்றி ஆராய்பவர்கள் இப் படிம அடுக்குகளை மேற்கண்ட விவரங்களைப் பெற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள்.

  • புவிப்பொறிமுறைத்தட்டு இயக்கங்கள் (movement of tectonic plates)
  • காலநிலை மாற்றங்கள் பற்றிய வரலாறு (past changes in climate)
  • ஆதிகால கடல் நீர் சுற்றோட்டங்கள் ( ancient ocean circulation patterns)
  • பேரழிவுகள் (catastrophic events)

கடல் படிவுகள் அவை உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பொருத்து 4 வகையாக பிரிக்கப்படும்.

  • தரையிலிருந்து உருவாக்கப்பட்ட படிவுகள் (Lithogenic sediments)
  • கடலுக்கடியில் இறந்த உயிரினங்களில் எச்சங்களில் இருந்து உருவாக்கப்பட்ட படிவுகள் (Biogenous sediments )
  • நீரினால் உருவாக்கப்பட்ட படிவுகள் (Hydrogenous sediments )
  • அண்டவெளியில் இருந்து வந்த படிவுகள் (Cosmogenous sediments )
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_படிவு&oldid=1376421" இலிருந்து மீள்விக்கப்பட்டது