மோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோர்
மோரும் (வலதுபுறம்), பாலும் (இடதுபுறம்)
பரிமாறப்படும் வெப்பநிலைபானம்
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிரூட்டப்பட்டு
முக்கிய சேர்பொருட்கள்பால்
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
40 (100 கிராம்கள்) கலோரி
மோர், குறைந்த கொழுப்புச்சத்து
உணவாற்றல்169 கிசூ (40 கலோரி)
4.8 g
0.9 g
3.3 g
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(12%)
116 மிகி
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன

மோர் என்பது பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று. தயிரிலிருந்து வெண்ணெயை அகற்றிய பின் கிடைக்கும் நீர்மப்பொருள் மோர் ஆகும்.[1][2]

மோருடன் தேவைக்கேற்ப சிறிது உப்பு கலந்து குடிக்கலாம். இது சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சோடா ரொட்டி தயாரிப்பில் இதில் உள்ள அமிலம், சோடியம் பைகார்பனேட்டுடன் வினைபுரிந்து, கார்பனீராக்சைடை வெளியிடுகிறது. இதனால் ரோட்டி மிருதுவாக உள்ளது. மேலும், மோர் கோழிக் கறி மற்றும் பன்றி இறைச்சியில் சேர்க்கப்படுகிறது. இதனால், இதில் உள்ள லாக்டிக் அமிலம் இறைச்சியை மென்மையாகவும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மற்றும் கூடுதல் சுவைகளை இறைச்சியில் ஊடுருவ அனுமதிக்கிறது.[3]

பாரம்பரிய மோர்[தொகு]

முதலில், மோர் என்பது வெண்ணெய் எடுக்கப்படும் போது மீதியாக உள்ள திரவத்தை குறிக்கிறது. பாரம்பரியமாக, நன்கு காய்ச்சிய பாலை நன்கு ஆற வைத்து அதில் சிறிது தயிர் ஊற்றி சில மணிநேரம் மூடி வைப்பார்கள். இந்த நேரத்தில், பாலில் இயற்கையாக உள்ள லாக்டிக் அமிலம் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் பாலை புளிக்கவைகின்றன. இதன் மூலமாக கெட்டித் தயிர் கிடைக்கிறது. தயிரின் மேல் படர்ந்திருக்கும் பாலாடைகளைச் சேகரித்தும் வெண்ணெய் எடுப்பதுண்டு. . இது வெண்ணெய் எடுக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது, ஏனெனில் குறைந்த பி.எச் கொண்ட கிரீம் கொழுப்பு புதிய கிரீமை விட எளிதாக இணைகிறது. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் வளர்வதைத் தடுக்க இந்த அமில சூழல் உதவுகிறது. தயிரை கடைந்து நீர் சேர்த்தால் குடிக்கும் பானமான பாரம்பரிய மோர் கிடைக்கிறது.[4]

பாரம்பரிய மோர் இன்றளவும் இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் குடும்பங்களில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மேற்கு நாடுகளில் அரிதாகவே காணப்படுகிறது. நேபாளத்தில் மோர் "மோகி" என்று கூறப்படுகிறது. நேபாள வீடுகளில் மோர் என்பது பொதுவான ஒரு திரவ உணவாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு அல்லது சிற்றுண்டியுடன் தரும் ஒரு பக்க உணவாகவும் உள்ளது. மேலும், இது நிறைய குடும்பங்களில் மக்காச்சோள மாவில் தயாரித்த ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது.

அமிலப்படுத்தப்பட்ட மோர்[தொகு]

அமிலப்படுத்தப்பட்ட மோர்' என்பது வினிகர் அல்லது எலுமிச்சை சாறு போன்ற உணவு தர அமிலத்தை பாலில் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு மாற்றாகும்.[5] 1 தேக்கரண்டி (0.5 அமெரிக்க திரவ அவுன்ஸ், 15 மில்லி) அமிலத்தை 1 கப் (8 அமெரிக்க திரவ அவுன்ஸ், 240 மில்லி) பாலுடன் கலந்து, 10 நிமிடங்கள் வரை, அது கரையும் வரை இருக்க விடலாம். பால் மூலப்பொருளின் கொழுப்பு உள்ளடக்கம் எந்த அளவிலும் பயன்படுத்தப்படலாம், ஆனால் முழு பால் பொதுவாக பேக்கிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. பன்னீர் தயாரிக்க பயன்படும் செயல்பாட்டில், அத்தகைய அமிலமயமாக்கல் வெப்பத்தின் முன்னிலையில் செய்யப்படுகிறது.

ஊட்டச்சத்து[தொகு]

மோர் கலோரி மற்றும் கொழுப்பின் அடிப்படையில் வழக்கமான பாலுடன் ஒப்பிடத்தக்கது. ஒரு கப் (237 மில்லி) முழு பாலில் 157 கலோரிகளும் 8.9 கிராம் கொழுப்பும் உள்ளன. ஒரு கப் முழு மோர் 152 கலோரிகளையும் 8.1 கிராம் மொத்த கொழுப்பையும் கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு கொண்ட மோரும் கிடைக்கிறது.[6] மோரில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் தடயங்கள் உள்ளன.[7]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Got Buttermilk? http://www.nytimes.com/2009/04/26/magazine/26food-t-000.html By CHRISTINE MUHLKE Published: April 22, 2009
  2. Fankhause, David B. (2007-06-14). "MAKING BUTTERMILK". University of Cincinnati Clermont College. Archived from the original on 2007-08-28. பார்க்கப்பட்ட நாள் 2007-08-21.
  3. "Buttermilk marinade". Smoking Meat Forums. November 14, 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-03-21.
  4. Douma (Ed.), Michael (June 14, 2007). "Ripening to Ferment Milk Sugars to Lactic Acid". Webexhibits. Archived from the original on 2019-05-12. பார்க்கப்பட்ட நாள் 2008-12-31.
  5. "Title 21 – Food and Drugs: Chapter I, Part 131 Milk and Cream" (PDF). Electronic Code of Federal Regulations (e-CFR). April 1, 2007. பார்க்கப்பட்ட நாள் 2010-10-26.
  6. Filippone, Peggy Trowbridge. "Buttermilk health benefits". பார்க்கப்பட்ட நாள் October 13, 2013.
  7. Aparna, Karthikeyan (May 13, 2012). "Buttermilk, the best bet". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/features/metroplus/buttermilk-the-best-bet/article3415184.ece. பார்த்த நாள்: October 13, 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்&oldid=3682136" இலிருந்து மீள்விக்கப்பட்டது