அரிஞ்சய சோழன் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிஞ்சய சோழன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு


அரிஞ்சய சோழன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பராந்தக சோழ மன்னனின் புதல்வரும், இராஜாதித்தர் மற்றும் கண்டராதித்தரின் சகோதரன் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற அரிஞ்சய சோழனைச் சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

கதைமாந்தர் இயல்பு[தொகு]

பராந்தக தேவரின் புதல்வர் அரிஞ்சயர். சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை விரட்டுவதற்காகப் பெரும் படையை எதிர்த்துப் போர் புரிந்தவர். அப்போரில் படுகாயமுற்ற போதும், கண்டராத்தரின் மறைவுக்குப் பின் சோழ அரசராகப் பதவியேற்றார். மிகக் குறுகிய காலமே அரசராக இருந்தார். பின் உயிர்துறந்தார். இவருக்குப் பின் இவரது மகன் சுந்தர சோழர் சோழப் பேரரசை ஆண்டார்.

நூல்கள்[தொகு]

அரிஞ்சையரைக் கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]