பனிக்கட்டிச் சிற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009 இல் கியூபெக்கில் நடைபெற்ற விழாவில் உருவாக்கப்பட்ட பனிக் கோட்டை ஒன்று.

பனிக்கட்டிச் சிற்பம் என்பது பனிக்கட்டியினை மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப்படும் சிற்ப வடிவங்கள் ஆகும். பனிக்கட்டி மூலம் உருவாக்கப்படும் சிற்பங்கள் நேர்த்தியாக அல்லது தூய அலங்காரமாக பிரித்தொடுக்க அல்லது தனியாக உருவாக்கக் கூடியவை. பனிக்கட்டிச் சிற்பங்கள் அதன் குறுகிய வாழ்நாள் காரணமான பொதுவாக அவை சிறப்பான அல்லது ஊதாரித்தனமான சம்பவங்களின்போது இடம்பெறுகின்றன.

சிற்பத்தின் வாழ்நாள் சூழலின் வெப்பத்தினால் நிர்ணயிக்கப்படும். அது சில நிமிடங்கள் முதல் சில மாதங்கள் வரை காணப்படலாம். உலகில் பல இடங்களில் பனிக்கட்டி விழாக்களும் பனிக்கட்டி சிற்பம் செதுக்கும் போட்டிகளும் இடம்பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிக்கட்டிச்_சிற்பம்&oldid=1370248" இலிருந்து மீள்விக்கப்பட்டது