சிவகீதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகீதை என்பது இராமனுக்கு சிவபெருமான் உபதேசித்தருளிய பாடல்களைக் கொண்டுள்ள நூலாகும். சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது. இப்புராணத்தில் 16 அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள சிவகீதை 760 பாடல்களால் ஆனது.[1]

இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவநெறியாகவும், இறைவழிபாடு, இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும், மேலும் சிவபூசை முறைகளை அருளிச் செய்திருக்கிறார்.

சிவகீதை நோக்கம்[தொகு]

இராமர் வனவாசஞ்செய்யுங்காலத்திலே மனைவியை இழந்து வருந்தி கொண்டிருக்கும்பொழுது அகத்திய முனிவர் அதனையறிந்து அவருடைய வருத்தத்தைத் தீர்க்க நினைந்து அவரிடஞ்சென்று விரதாதீட்சை செய்து பாசுபத விரதத்தை அனுட்டிக்கும்படி கற்பித்து அவ்விரதத்தாற் சிவன் பிரசன்னமாகிப் பாசுபதாஸ்திரப் படையைத் தந்தருளுவர் என்றும் அப்படையினாலே இராவணன் முதலாகிய அரக்கர்களைக் கொன்று சீதையை பெறலாம் என்றுங் கூறிப்போயினர். அதுகேட்ட இராமர் அவ்வாறே விரதத்தை அனுட்டித்தபொழுது சிவபெருமான் பிரசன்னமாகி அவருக்கு உபதேசித்தருளியது இச் சிவகீதையாகும்.இச்சிவகீதையானது பகவத்கீதைக்குக் காலத்தால் முற்பட்டது.அது மட்டுமின்றி சிவபிரான் இராமனுக்கு இக்கீதை உபதேசம் செய்யும் காலத்தில் முருகப்பெருமான் உடனிருந்து கேட்டு அதனை சனத்குமார முனிவருக்கு உபதேசம் செய்தார்.இவ்வரிய சிவகீதை பத்மபுராணத்தில் இருப்பதாலும் வான்மீகி இராமயணத்தில் இல்லையாதலாலும் சிவபிரானுக்கு ஏற்றங் கூறுவதாலும் வைணவர்கள் இக்கீதைக்குப் பூர்வபக்ஷம் சாதிப்பர்.இதற்குச் சித்தாந்தங் கூறுவோர் இராமாயணம் ஆதிகாவியமாதலாலும் அதில் ஞானபரமான செய்திகளைக் கூறுவது தகுதியல்லவென நீக்கி இரசத்தின் நிமித்தம் வான்மீகி இராமாயணத்தில் சிவகீதையைக் கூறவில்லை என்றும் சிவகீதை பிரமாணமே என்றுங் கூறுவர்.

தமிழில் சிவகீதை[தொகு]

வடமொழியிலுள்ள சிவகீதை ம. முத்துக்குமாரசாமி குருக்கள் செய்த தமிழுரையோடு நல்லூர் த. கைலாசப்பிள்ளையால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டது. இந்நூலில் கலி ரு0கக ஆண்டு ஆநந்த என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் கே. சிதம்பரநாத முதலியாரின் நூலகத்திலிருந்து அவர் வழியில் அன்பளிப்பாக சரசுவதி மகால் நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகீதை&oldid=3850832" இலிருந்து மீள்விக்கப்பட்டது