மன்னார்குடி

ஆள்கூறுகள்: 10°39′54″N 79°27′03″E / 10.664900°N 79.450700°E / 10.664900; 79.450700
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னார்குடி
—  தேர்வு நிலை நகராட்சி  —
மன்னார்குடி
இருப்பிடம்: மன்னார்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°39′54″N 79°27′03″E / 10.664900°N 79.450700°E / 10.664900; 79.450700
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் மன்னார்குடி வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி மன்னார்குடி
சட்டமன்ற உறுப்பினர்

டி. ஆர். பி. ராஜா (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

66,999 (2011)

5,801/km2 (15,025/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

11.55 சதுர கிலோமீட்டர்கள் (4.46 sq mi)

45 மீட்டர்கள் (148 அடி)

குறியீடுகள்


மன்னார்குடி (ஆங்கிலம்:Mannargudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும்.

மன்னார்குடியில் உள்ள இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மிகவும் பெருமை வாய்ந்தது. வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°40′N 79°26′E / 10.67°N 79.43°E / 10.67; 79.43 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது.

போக்குவரத்து[தொகு]

மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கும்பகோணம், வேதாரண்யம், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, ஒரத்தநாடு ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, பழனி, ராமேஸ்வரம், கம்பம், ஈரோடு, வேலூர், ஆரணி, புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.

மன்னார்குடி தொடருந்துப் போக்குவரத்து மூலமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவுத் தொடருந்துகள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் தொடருந்துப் போக்குவரத்து நடைபெறுகிறது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,372 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 66,999 ஆகும். அதில் 33,195 ஆண்களும், 33,804 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.3% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6174 ஆகஉள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,624 மற்றும் 779 ஆகஉள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.13%, இசுலாமியர்கள் 6.82%, கிறித்தவர்கள் 6.82%மற்றும் பிறர் 0.34% ஆகஉள்ளனர்.[5]

கோவில் நகரம்[தொகு]

மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில் உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.

சமணக்கோயில்[தொகு]

மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம் சோழ நாட்டில் உள்ள சமணக்கோயில்களில் ஒன்றாகும். இது தவிர சோழ நாட்டில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), தீபங்குடி ஆகிய இடங்களில் சமணக் கோயில்கள் உள்ளன. [6] [7]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Mannargudi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  5. மன்னார்குடி மக்கள்தொகை பரம்பல்
  6. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12
  7. மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்குடி&oldid=3859000" இலிருந்து மீள்விக்கப்பட்டது