உள்ளடங்கிய ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளடங்கிய ஆற்றல் (embodied energy) என்பது ஒரு உற்பத்திப் பொருளைச் செய்வதில் பயன்படுத்தப்பட்ட ஆற்றலின் அளவைக் குறிக்கும். இது, ஒரு உற்பத்திப் பொருளின் முழு வாழ்வுச் சுழலுக்குத் தேவைப்படும் ஆற்றலின் அளவைக் கண்டறிவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரு கணக்கு வைப்பு முறையாகும். மேற்படி வாழ்வுச் சுழலானது, மூலப்பொருள் எடுத்தல், அதனைக் கொண்டு செல்லல், உற்பத்தி செய்தல், பொருத்துதல், நிறுவுதல், கழற்றுதல், உடைத்தல், உக்குதல் போன்ற பல படிகளை உள்ளடக்கியதாகும்.

கையாளப்படும் வெவ்வேறு முறைகளினால், உள்ளடங்கிய ஆற்றலின் வகை, பயன்பாட்டின் வீச்செல்லையும் அளவும் ஆகியவை பற்றிய வெவ்வேறு விதமான புரிதல்கள் உருவாகின்றன. சில முறைகள், பொருளியல் செயற்பாடுகளுக்கு அவசியமான பெற்றோலிய எரிபொருளின் அடிப்படையில் உள்ளடங்கிய ஆற்றலைக் கணக்கிடுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளடங்கிய_ஆற்றல்&oldid=1354571" இலிருந்து மீள்விக்கப்பட்டது