வாஸ்ப்-12பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாஸ்ப்-12பி
WASP-12b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

வியாழன் கோளுடன் வாஸ்ப்-12பி (வலது) ஒப்பீடு.
தாய் விண்மீன்
விண்மீன் வாஸ்ப்-12
விண்மீன் தொகுதி அவுரிகா
வலது ஏறுகை (α) 06h 30m 33s
சாய்வு (δ) +29° 40′ 20″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 11.69
தொலைவு871[1] ஒஆ
(267 புடைநொடி)
அலைமாலை வகை G0
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 0.0229 ± 0.0008 AU
Periastron (q) 0.0218 AU
Apastron (Q) 0.0240 AU
மையப்பிறழ்ச்சி (e) 0.049 ± 0.015
சுற்றுக்காலம்(P)1.091423 ± 3e-6 நா
சாய்வு (i) 83.1+1.4
−1.1
°
Argument of
periastron
(ω) -74+13
−10
°
Time of கடப்பு (Tt) 2454508.9761 ± 0.0002 யூநா
இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)1.39 ± 0.04[1] MJ
ஆரை(r)1.83+0.06
−0.07
[1] RJ
அடர்த்தி(ρ)326 கிகி/மீ3
மேற்பரப்பு ஈர்ப்பு(g)1.16 g
வெப்பநிலை (T) 2525[2] கெ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் ஏப்ரல் 1, 2008[1]
கண்டுபிடிப்பாளர்(கள்) கேமரன், மற்றும் பலர்.)
கண்டுபிடித்த முறை Transit
கண்டுபிடித்த இடம் SAAO
கண்டுபிடிப்பு நிலை வெளியீடு[2]
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

வாஸ்ப்-12பி (WASP-12b) என்பது சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள ஒரு புறக்கோள் ஆகும். இது வாஸ்ப்-12 என்ற விண்மீனைச் சுற்றிவருகிறது. இதன் கண்டுபிடிப்பு 2008 ஏப்ரல் 1 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது[1]. இதன் விண்மீனுக்கு மிகவும் கிட்டிய தூரத்தில் இது இருப்பதால், இதன் ஆரை வியாழனுடையதைவிட 83% பெரிதாகவும், அதன் திணிவை விட 39% வீதம் அதிகமானதாகவும் உள்ளது[1]. இதன் விண்மீனை ஒரு நாளை விடச் சற்று அதிகமான நேரத்தில் சுற்றி வருகிறது. இதன் விண்மீனில் இருந்தான தூரம் சூரியனில் இருந்து பூமியின் தூரத்தின் 1/44 மடங்காகும்.

வாஸ்ப்-12 சூரியன் வாஸ்ப்-12பி கோளை விழுங்கும் காட்சி, ஓவியரின் மனப்பதிவு

இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் வரையே என்று 2010, மே 20 இல் வெளிவந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன[3].

வாஸ்ப்-12பி என்ற இக்கோளில் பெருமளவு கரிமம் செறிந்துள்ளதாக 2010, டிசம்பர் 8 ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "வைரங்களைக் கொண்ட மலைகளும் நிலப்பகுதிகளும் கூட அங்கு காணப்படலாம்” என ஆய்வுகள் தெரிவிக்கின்றன[4].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "The Planets". SuperWASP. Archived from the original on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26.
  2. 2.0 2.1 Hebb et al.; Collier-Cameron, A.; Loeillet, B.; Pollacco, D.; Hébrard, G.; Street, R. A.; Bouchy, F.; Stempels, H. C. et al. (2009). "WASP-12b: THE HOTTEST TRANSITING EXTRASOLAR PLANET YET DISCOVERED". Astrophysical Journal 693: 1920–1928. doi:10.1088/0004-637X/693/2/1920. http://www.iop.org/EJ/abstract/0004-637X/693/2/1920. பார்த்த நாள்: 2010-12-10. 
  3. Hubble Finds a Star Eating a Planet nasa.gov. 2010-05-20. Retrrieved on 2010-12-10.
  4. [*Exoplanets cast doubt on astronomical theories, நேச்சர், டிசம்பர் 8, 2010

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


ஆள்கூறுகள்: Sky map 06h 30m 33s, +29° 40′ 20″

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஸ்ப்-12பி&oldid=3571366" இலிருந்து மீள்விக்கப்பட்டது