அசுவினி பொன்னப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுவினி பொன்னப்பா
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்அசுவினி பொன்னப்பா
நாடு இந்தியா
பிறப்புசெப்டம்பர் 18, 1989
பெங்களூரு, இந்தியா
உயரம்5'5
எடை58 கிலோ
விளையாடிய ஆண்டுகள்2007–நடப்பு
கரம்வலது
பயிற்சியாளர்திபங்கர் பட்டாசார்ஜி
மகளிர் இரட்டையர்
பெரும தரவரிசையிடம்10 (25 ஆகத்து 2010)
தற்போதைய தரவரிசை24 (2 சனவரி 2024)
பதக்கத் தகவல்கள்
இறக்கைபந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இன்சியோன் மகளிர் அணி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 புது டெல்லி மகளிர் இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோல்ட் கோஸ்ட் கலப்பு அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 புது டெல்லி கலப்பு அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 கிளாஸ்கோ 10 மகளிர் இரட்டையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 பிர்மிங்காம் 10 கலப்பு அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 கோல்ட் கோஸ்ட் மகளிர் இரட்டையர்
இ.உ.கூ. உலக போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 லண்டன் மகளிர் இரட்டையர்
உபெர் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 புது டெல்லி மகளிர் அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 குங்க்ஷன் மகளிர் அணி
இ. உ. கூ. சுயவிவரம்

அசுவினி பொன்னப்பா (Ashwini Ponnappa; பிறப்பு:18 செப்டம்பர் 1989) ஒரு இந்திய இறக்கை பந்தாட்ட வீராங்கனை ஆவார்.[1][2][3] இவர் இந்திய சார்பில் கலந்துகொண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு வெண்கலம் மற்றும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளார். இவர் இந்தியா சார்பில் பல ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

கருநாடகத்தை சேர்ந்த அசுவினி பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்காக ஐதராபாத்திற்கு இடம் பெயர்ந்தார்.[4] 24 டிசம்பர் 2017 அன்று, அசுவினி தொழிலதிபர் கரண் மேதப்பாவை மணந்தார்.[5][6]

இறக்கைபந்தாட்டம்[தொகு]

அசுவினி 2001ஆம் ஆண்டு இந்திய இளநிலை சாதனையாளர் போட்டியில் முதலாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டின் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்|தெற்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2010ஆம் ஆண்டு புதுதில்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்களில் ஜ்வாலா குட்டாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் கலப்பு அணி போட்டிகளில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.[7]

பிறகு 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் இரட்டையரில் அவர் பங்கேற்றார். 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் குட்டாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[8] பிறகு இருவரும் 29 சூன் 2015 அன்று, கனடா ஓபன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றனர்.[9] 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் அசுவினி குட்டாவுடன் போட்டியிட்டார்.[10] 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் கலப்பு குழு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் பொன்னப்பா ஒருவராக இருந்தார், மேலும் பெண்கள் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டியுடன் இணைந்து வெண்கல பாதகம் வென்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashwini Ponnappa". CWG Delhi. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  2. "Ashwini Ponnappa, profile". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-29. பார்க்கப்பட்ட நாள் 2 April 2011.
  4. 4.0 4.1 "Badminton | Athlete Profile: Ashwini PONNAPPA - Gold Coast 2018 Commonwealth Games". results.gc2018.com. Archived from the original on 6 December 2021. பார்க்கப்பட்ட நாள் 29 August 2018.
  5. Varma, Devarchit (25 December 2017). "Ashwini Ponnappa ties the knot with long-time boyfriend Karan Medappa". Hindustan Times. http://www.hindustantimes.com/other-sports/ashwini-ponnappa-ties-the-knot-with-long-time-boyfriend-karan-medappa/story-7dWgzQHYLgtx5j9ziWPKsK.html. 
  6. "Ashwini Ponnappa ties the knot with businessman-model Karan Medappa, see pics". The Indian Express. 26 December 2017. http://indianexpress.com/article/sports/badminton/ashwini-ponnappa-ties-the-knot-with-businessman-model-karan-medappa-see-pics-4999317/. 
  7. Rao, Rakesh (14 October 2010). "Saina wins singles gold". தி இந்து. http://www.thehindu.com/sport/article830304.ece. 
  8. "Glasgow 2014 - Ashwini Ponnappa Profile". GCF. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
  9. "Jwala Gutta-Ashwini Ponnappa Win Canada Open". Press Trust of India. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.
  10. "Ashwini Ponnappa Bio, Stats, and Results" (in en). Olympics at Sports-Reference.com இம் மூலத்தில் இருந்து 2020-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200418121420/https://www.sports-reference.com/olympics/athletes/po/ashwini-ponnappa-1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவினி_பொன்னப்பா&oldid=3905302" இலிருந்து மீள்விக்கப்பட்டது