ஆன் என்ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன் என்ரைட்
ஆன் என்ரைட்
பிறப்பு அக்டோபர் 11, 1962
டப்லின்,  அயர்லாந்து
நாடு: அயர்லாந்து
பணி எழுத்தாளர்
துணை மார்ட்டின் மர்ஃவி

ஆன் என்ரைட் (Anne Enright) (பிறப்பு: 1962 , டப்லின் அயர்லாந்து) அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றா. இவர் பல கட்டுரைகளும், குறுங் கதைகளும், நான்கு புதினங்களும் ஒரு புதினமல்லாப் பொதுநூலும் எழுதியுள்ளார்.[1][2]

ஆன் என்ரைட் கனடாவில் உள்ள பிரித்தானிய கொலம்பியா மாநிலத்தில் விக்டோரியாவில் உள்ள லெஸ்ட்டர் பியர்சன் யுனைட்டடு வோர்ல்டு காலேஜ் ஆவ் தெ பசிபிக் கல்வி நிறுவனத்தில் படித்து, பின்னர் டப்லினில் உள்ள டிரினிட்டி காலேஜ் டப்லினில் படித்தார். அதன் பின், ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவருடைய ஆசிரியர்களாக ஆஞ்செலா கார்ட்டர், மால்க்கம் பிராட்பரி இருந்தனர் [3] ஆறு ஆண்டுகளாக டப்லினில் ரேடியோ டைலிவிஸ் ஐரியான் என்னும் தொலைக்காட்சிப் பிரிவில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்தார்[4] 1993 ஆம் ஆண்டுமுதல் முழுநேர எழுத்தாளராக பணியாற்றத் தொடங்கினார்[3].

இவருடைய எழுத்துக்களும் கட்டுரைகளும் பல புகழ்பெற்ற ஆங்கில இதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றுள் த நியூ யார்க்கர் (The New Yorker), த பாரிஸ் ரிவ்யூ (The Paris Review), மற்றும் கிராண்ட்டா (Granta) ஆகியன அடங்கும். இவை பின்னர் த போர்ட்டபில் வர்ஜின் என்னும் தொகுப்பாக 1991 ல் வெளியாகியது. இது ஐரிஷ் இலக்கியத்திற்கான ரூனி பரிசைப் பெற்றது [3] இவருடைய புதினங்கள்: த விக் மை பாதர் வோர் (என் தந்தை அணிந்த பொய்முடி, The Wig My Father Wore), வாட் ஆர் யூ லைக் (நீ எப்படிப் பட்டவன்(/ள்)?, What Are You Like?) , த பிளஷர் ஆவ் எலிசா லிஞ்ச் (எலிசா லிஞ்ச்சின் இனபம், The Pleasure of Eliza Lynch), த காதரிங் (கூட்டம், The Gathering) (2007) குறிப்பிடத்தக்கன. நீ எப்படிப்பட்டவன்(/ள்) என்னும் புதினம் ராயல் சொசைட்டி என்க்கோர் பரிசு பெற்றது. இவருடைய புதினமல்லா பொது நூல் 2005ல் எழுதிய தாய்மையைப் பற்றிய, "மேக்கிங் பேபீஸ்" (குழந்தைகள் ஆக்குதல், Making Babies) என்பதாகும்.

இவர் BBC ரேடியோ 4 க்கு வழக்கமாக பங்களிப்பவர். அக்டோபர் 16, 2007 ஆம் நாளன்று த காதரிங் (கூட்டம்) என்னும் புதினத்திற்காக மான் புக்கர் பரிசு பெற்றார். இப்பரிசின் மதிப்பு £50,000[5][6]

இவருடைய கணவர் மார்ட்டின் மர்ஃவி என்னும் நடிகர். இவர் இரு குழந்தைகளுடன் விக்லோ மாவட்டத்தில் பிரே என்னும் ஊரில் வாழ்கிறார்[3].

இவருடைய நூல்கள்[தொகு]

  • The Portable Virgin (1991)
  • The Wig My Father Wore (1995)
  • What Are You Like? (2000)
  • The Pleasure of Eliza Lynch (2002)
  • Making Babies: Stumbling into Motherhood (2004)
  • The Gathering(20 07)

மேற்கோள்கள்[தொகு]

  1. Kennedy, AL, 28 April 2007, The din within, The Guardian.
  2. Anne Enright's "The Gathering" wins Man Booker Prize for fiction, International Herald Tribune.
  3. 3.0 3.1 3.2 3.3 Hoping to win another Booker Prize for Ireland, Bray People.
  4. Hayden, Anne, 29 December 2005, Anne Enright பரணிடப்பட்டது 2006-02-18 at the வந்தவழி இயந்திரம், The Sunday Business Post.
  5. Lawless, Jill, Anne Enright wins Booker Prize, Yahoo! News.
  6. Irish woman wins Man Booker Prize, RTÉ.ie.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்_என்ரைட்&oldid=3924553" இலிருந்து மீள்விக்கப்பட்டது