முளைக் கண்ணிமுடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முளைக் கண்ணிமுடிச்சு
வகைகண்ணி
பொதுப் பயன்பாடுகயிறொன்றைக் கழியொன்றிலோ அல்லது வேறு பொருளிலோ கட்டுதல்
ABoK
  1. 1815

முளைக் கண்ணிமுடிச்சு (pile hitch) என்பது, கயிறு ஒன்றைக் கழி அல்லது வேறு பொருட்களுடன் கட்டுவதற்குப் பயன்படும் ஒருவகைக் கண்ணிமுடிச்சு ஆகும். இது முடிவதற்கு மிகவும் இலகுவானது. இரண்டு முனைகளும் இல்லாவிட்டாலும், கயிற்றின் இடைப்பகுதியில் இதனை முடிய முடியும். இதனால் இது பல வேளைகளில் ஒரு பெறுமதியான முடிச்சாக அமைகிறது.

இதனை முடிவதற்கு, கயிற்றின் இடைப்பகுதியில் ஒரு தடத்தைப் போடவேண்டும். கழியொன்றின் முனைக்கு அருகில் தடத்தின் இரண்டு பகுதிகளையும் சுற்றவேண்டும். அதனைக் கயிற்றைச் சுற்றி அதன் கீழாக எடுக்கவேண்டும். பின்னர் அந்தத் தடத்தின் நுனியை எடுத்துக் கழியின் முனையூடாக மாட்டவேண்டும்.

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளைக்_கண்ணிமுடிச்சு&oldid=3225442" இலிருந்து மீள்விக்கப்பட்டது