ஹொங்கொங் பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹொங்கொங் பௌத்தம் என்பது ஹொங்கொங் வாழ் ஹொங்கொங்கர்களால் பின்பற்றப்படும் பௌத்த வழிபாட்டு முறைகளைக் கொண்டதாகும். இந்தியாவில் தோன்றிய பௌத்தம் ஆசிய நாடுகள் பலவற்றிற்கு பரவிய பௌத்த மதம் சீனாவிற்கும், சீனாவில் இருந்து ஹொங்கொங் மக்களுக்கும் பரவியுள்ளது. இந்த "ஹொங்கொங் பௌத்தம்" என்பது சீனப் பௌத்த முறைகளை ஒத்ததாக உள்ளது.

இருப்பினும் ஹொங்கொங் வாழ் இளைய சமுதாயம் கடவுள் நம்பிக்கையற்ற இறைமறுப்பாளர்களாகவே பெரும்பான்மையானோர் உள்ளனர். ஹொங்கொங்கில் இருக்கும் பௌத்தக் கோயில்கள் என்பது ஒரு வரலாற்று சின்னமாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. இந்த விகாரைகளை புதிதாக பெருப்பிப்பதோ, மேம்படுத்துவதோ பெரும்பாலும் இல்லை எனலாம். பௌத்த விகாரைகள் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடமாக, மெருகற்ற நிலையிலேயே உள்ளன. அவற்றிற்கு செல்வோரில் அதிகமானோர் பார்வையிடுவதற்காக செல்கின்றனரே தவிர வழிபடுவதற்கு செல்வோர் மிகவும் குறைவு.

உலகில் பௌத்தம் பரவிய நாடுகளில் எல்லாம், பௌத்தம் பரவுவதற்கு முன்னர், அந்தந்த நாட்டு மக்கள் எவ்வாறான இறை அல்லது மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனரோ அதனையொட்டிய ஒரு வழிபாட்டு முறையினை கொண்டுள்ளனர். இலங்கை பௌத்தம் என்பது, இந்து வழிபாட்டு முறையில் இருந்து மருவல் பெற்றது என்பதால் அது இந்து வழிபாட்டு முறைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்திருப்பதுப் போன்றே, சீனப் பௌத்தம் என்பதும் சீனர்களின் ஆரம்ப பண்பாடு, பழக்க வழக்கம் மற்றும் வழிபாட்டு முறைகளை ஆதாரமாகக் கொண்டு விளங்குகிறது. ஹொங்கொங்கர்களும் சீன மரபினர் என்பதால் அதையொத்த வழிபாட்டு முறையே ஹொங்கொங் பௌத்தர்களிடையேயும் காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_பௌத்தம்&oldid=3074036" இலிருந்து மீள்விக்கப்பட்டது