ரைட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரைட்லி (Writely) இணையமூடான சோதனையிலிருக்கும் ஆவணங்களை உருவாக்கி பகிர்வதற்கான ஓர் கூகிளின் இணையம் சார்ந்த மென்பொருளாகும் (2006 இதை உருவாக்கிய் நிறுவனத்தை கூகிள் உள்வாங்கிக் கொண்டது). இதில் பலரும் சேர்ந்து ஆவணங்களை அணுகுவதற்கான உரித்துடன் சேர்ந்து எழுத வியலும். இது பார்பதே கிடைக்கும் பயனர் இடைமுகத்தை உலாவியூடாக வழங்கி வருகின்றது. தட்டச்சுப் பலகைக் குறுக்கு வழிகள், மெனியூ, டயலொக் பாக்ஸ் போன்ற வரைகலை இடைமுகங்களை மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் ஓப்பிண் ஆபிஸ் போன்ற பதிப்புக்களைப் போன்று வழங்கி வருகின்றது.

வசதிகள்[தொகு]

மொத்தமாக எவ்வளவு சேமிக்கலாம் என்று ஓர் எல்லையில்லவிடினும் ஓர் கோப்பில் எழுத்துக்கள் 500 கிலோ பைட்டிற்கு மிகையாகாமலும் படங்கள் 2 மெகா பைட்டிற்கு மிகையாகாமலும் இருத்தல் வேண்டும்.

இது மைக்ரோசாப்ட் ஆபிஸ், செறிந்த எழுத்து கோப்புமுறை, திறந்த ஆவணக் கோப்பு முறை போன்ற முறையிலமர்ந்த ஆவணங்களைத் திறந்து திருத்தங்கள் செய்து அச்சிடமுடியும். ரைட்லி அடிப்படையான HTML மற்றும் pdf கோப்பு முறைகளை ஆதரிக்கின்றது.

இது கூகிளின் பிளாக்கர் உட்பட வேறு வலைப் பதிப்புக்களுடன் சேர்ந்தியங்குகின்றது. சேவருடன் ஒன்றிணைந்தவுடன் பட்டண் (button) ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் வ்லைப்பதிவை மேற்கொள்ளவியலும்.

ரைட்லி இணையம் 2.0 ஐப் ஏஜேஎக்ஸ் ஐப் பாவிக்கின்றது.

வசதிகள்[தொகு]

மொத்தமாக எவ்வளவு சேமிக்கலாம் என்று ஓர் எல்லையில்லாவிடினும் ஓர் கோப்பில் எழுத்துக்கள் 500 கிலோ பைட்டிற்கு மிகையாகாமலும் படங்கள் 2 மெகா பைட்டிற்கு மிகையாகாமலும் இருத்தல் வேண்டும்.

இது மைக்ரோசாப்ட் ஆபிஸ், செறிந்த எழுத்து கோப்புமுறை, திறந்த ஆவணக் கோப்பு முறை போன்ற முறையிலமர்ந்த ஆவணங்களைத் திறந்து திருத்தங்கள் செய்து அச்சிடமுடியும். ரைட்லி அடிப்படையான HTML மற்றும் pdf கோப்பு முறைகளை ஆதரிக்கின்றது.

இது கூகிளின் பிளாக்கர் உட்பட வேறு வலைப் பதிப்புக்களுடன் சேர்ந்தியங்குகின்றது. சேவருடன் ஒன்றிணைந்தவுடன் பட்டண் (button) ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் வ்லைப்பதிவை மேற்கொள்ளவியலும்.

ரைட்லி இணையம் 2.0 ஐப் ஏஜேஎக்ஸ் ஐப் பாவிக்கின்றது.

கூகிளின் உள்வாங்கல்[தொகு]

மார்ச் 9 கூகிள் நிறுவனம் ரைட்லியை' உள்வாங்கியது. அச்சமயம் அதில் ஆக 4 பேர் மாத்திரமேயிருந்தனர். ரைட்லி ஆகஸ்டு 18, 2006 முதல் மீண்டும் அங்கத்துவர்களை அநுமதிக்கின்றது. ரைட்லி கணக்கொன்றை வைத்திருப்பவர் ஆவனம் ஒன்றைக் கூட்டு -முயற்சி மூலம் ஆக்க முடியும்.

ரைட்லி தற்சமயம் மைக்ரோசாப்ட்.நெட் தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. இது லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் கூகிள் ஒத்தியங்காது எனக் கருதப் படுகின்றது. இது மொனோ திட்டத்துடன் கூகிளின் ஆதரவுடன் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைட்லி&oldid=2269444" இலிருந்து மீள்விக்கப்பட்டது