கூகுள் நிகழ்நேரத் தேடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் நிகழ்நேரத் தேடுதல் (Google Real-Time Search) எனும் வசதியானது கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு சேவையாகும். இத்தேடுதலின் முடிவுகளானவை டுவிட்டர், யாகூ! விடைகள், வலைப்பூக்கள், செய்தி இணையதளங்கள்[1] போன்றவற்றிலிருந்து பெறப்படுகின்றன. இந்த வசதியானது திசம்பர் 7, 2009 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.[2] பிப்ரவரி 24, 2010 முதல் இத்தேடலில் ஃபேஸ்புக் நிலைமைப் புதுப்பிப்புகளும் (Status updates) சேர்க்கப்பட்டன.[3] இதனை ஒத்த ஒரு வசதியானது ஏற்கனவே மைக்ரோசாஃப்டின் பிங் தேடுபொறியில் இருந்து வந்தது. அவ்வசதியானது டுவிட்டரிலிருந்தும் ஃபேஸ்புக்கிலிருந்தும் மட்டுமே முடிவுகளைக் காட்டியது. கூகுள் நிகழ்நேரத் தேடுதலானது பல மொழிகளிலும் கிடைக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]