மலேசியா எயர்லைன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலேசியா எயர்லைன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தலைமை அலுவலகம்
The former Bangunan MAS in Kuala Lumpur once served as the company headquarters

மலேசியா எயர்லைன்ஸ் ஆங்கிலம்: Malaysia Airlines; மலாய்: Penerbangan Malaysia) என்பது) மலேசியாவின் தேசிய விமானச் சேவை நிறுவனமாகும். ஐந்து கண்டங்களிலும் உள்ள 100-க்கும் அதிகமான இடங்களுக்கு விமானச் சேவைகளை நடத்தும் இந்த நிறுவனத்தின் முதன்மைத் தளம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்; பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்; கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய வானூர்தி நிலையங்களையும் இந்த நிறுவனம் தளங்களாகப் பயன்படுத்துகின்றது.

இந்த நிறுவனம் ஸ்கைரக்ஸ் நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஐந்து விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். ஏசியானா எயர்லைன்ஸ், கட்டார் எயர்வேய்ஸ், கதே பசிபிக், சிங்கப்பூர் எயர்லைன்ஸ் ஆகியவை ஏனைய நான்கும் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Malaysia Airlines
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியா_எயர்லைன்சு&oldid=3915654" இலிருந்து மீள்விக்கப்பட்டது