அரவிடு மரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரவிடு மரபு விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்காவதும், கடைசியுமான மரபு ஆகும். ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த இம் மரபைச் சேர்ந்த முதலாமவன் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலிய ராம ராயன் ஆவார். அலிய ராம ராயன் தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர் .[1] [2] [3]  அரவிடு மரபினர், ஆந்திரா மாநிலம் பெனுகொண்டா என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். [4][5] அரவிடு மரபினர் ஆட்சி காலத்தில் தென் இந்தியாவில் தெலுங்கு இனத்தவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர் .[6] .

விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646


எனினும் அலிய ராம ராயன், முந்திய மரபின் கடைசி அரசனுக்குப் பதில் ஆளுநராகவே செயல்பட்டார். அலிய ராம ராயன் தலைக்கோட்டைப் போரில் இறந்ததும், அவனது தம்பியாகிய திருமலை தேவ ராயன் அரசனானார். இவரே அரவிடு மரபின் முதல் அரசனாவார். [7] [8]

அரவிடு மரபின் தொடக்கம் விஜயநகரப் பேரரசின் சிதைவின் தொடக்கமாகவும் அமைந்தது. அலிய ராம ராயனைத் தவிர்த்து, இம்மரபைச் சேர்ந்த எழுவர் விஜயநகரத்தை ஆட்சி செய்தனர். விஜயநகரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றபோதும், இவர்கள் ஆட்சி 1652 ஆம் ஆண்டுவரை நீடித்தது. இவர்களில் எவருமே பஹமானி சுல்தான்களின் ஒன்றுபட்ட வலுவை முறியடிக்க வல்லவராக இருக்கவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Aryan Books Internationa, Sākkoṭṭai Krishṇaswāmi Aiyaṅgār (2000) (in en). Vijayanagara: History and Legacy. பக். 186. https://books.google.co.in/books?id=VLFuAAAAMAAJ&dq=Aravidu+Dynasty+belongs+Telugu&focus=searchwithinvolume&q=Chikkadevaraya+dynasty+family+ramaraya++Aravidu. 
  2. MH, Karnatak Historical Research Society (1992) (in en). THE Karnatak Historical Review. பக். 2. https://books.google.co.in/books?id=wz5uAAAAMAAJ&dq=Aravidu+family+telugu&focus=searchwithinvolume&q=Aravidu+family+rulers+++authors+emperors++++belonged+++earliest. 
  3. National Book Trust, India, Robert Sewell, Domingos Paes, Fernão Nunes, Vasundhara Filliozat (1999) (in en). Vijayanagar: As Seen by Domingos Paes and Fernao Nuniz. பக். 51. https://books.google.co.in/books?id=IS1uAAAAMAAJ&dq=Aliya+Ramaraya+belonged+to+the+family+of+Aravidu+in+Andhra&focus=searchwithinvolume&q=+Aravidu+belonged+++family++Andhra+himself+predomination. 
  4. Britannica Educational Publishing, Kenneth Pletche (2010) (in en). The History of India. பக். 147. https://books.google.co.in/books?id=VsujRFvaHI8C&pg=PA147&dq=Aravidu+dynasty,+which+established+a+new+capital+at+Penukonda&hl=en&sa=X&ved=0ahUKEwjK_OiI7v7iAhVYdCsKHZBaD6oQ6AEIJjAA#v=onepage&q=Aravidu%20dynasty%2C%20which%20established%20a%20new%20capital%20at%20Penukonda&f=false. 
  5. CM, Claude Markovits (2002) (in en). A History of Modern India, 1480-1950. பக். 147. https://books.google.co.in/books?id=3d9UDwAAQBAJ&pg=PT738&dq=Dynasty+:+Aravidu+Dynasty+Founder+:+Tirumala+Capital+:+Penukonda&hl=en&sa=X&ved=0ahUKEwjXh4OA8P7iAhUZVH0KHYhKA9QQ6AEIJjAA#v=onepage&q=Dynasty%20%3A%20Aravidu%20Dynasty%20Founder%20%3A%20Tirumala%20Capital%20%3A%20Penukonda&f=false. 
  6. B.G.Paul & co., Henry Heras (1927) (in en). The Aravidu dynasty of Vijayanagara. பக். 12. https://books.google.co.in/books?id=bf1tAAAAMAAJ&dq=Aravidu+Telugu+origin&focus=searchwithinvolume&q=Aravidu+Dynasty+over+prior+++under++people+kanarese+Tamilians++Tamil+++india+southern+doubt++vijayanagara+empire+++Telugu+domination++origin. 
  7. Aravidu dynasty
  8. Vijayanagar Empire: Aravidu Dynasty
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிடு_மரபு&oldid=3612572" இலிருந்து மீள்விக்கப்பட்டது