வெளித் தொடரமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெளித் தொடரமைப்பு (space syntax) என்பது, வெளி (space), மனித நடத்தைகள் என்பவை தொடர்பான ஒரு கோட்பாடு ஆகும். இக்கோட்பாடும், இதனோடிணைந்த கருவிகள், வழிமுறைகள் என்பனவும், வெளிசார் தளக்கோலத்தில் அணுக்கத்தன்மை எவ்வாறு மனித நடத்தை, தொடர்பு, தொடர்பாடல் என்பவற்றில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை ஆய்வுசெய்ய உதவுகின்றது.

1970 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பில் இலியர் (Bill Hillier), ஜுலியேன் ஆன்சன் (Julienne Hanson) என்போர், கட்டிடங்களிலும், நகரங்களிலும் நகர்வுகளையும், தொடர்பாடல்களையும் பதிவு செய்வதற்கான ஒரு ஆய்வு முறையாக இதனை உருவாக்கினர். அவர்கள் கூட்டாக எழுதிய "வெளியின் சமுதாய ஏரணம்" (Scial Logic of Space) என்னும் ஆங்கில நூல் மூலம் அவர்கள் இதனை உலகுக்கு அறிமுகப்படுத்தினர். அன்றிலிருந்து பல அறிஞர்களதும் கவனத்தைக் கவர்ந்த இந்தக் கோட்பாடு பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கடந்து வந்துள்ளது. இன்று தொல்லியல் முதல், கட்டிடக்கலை, நகரத் திட்டமிடல் போன்ற பல துறைகளிலும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளித்_தொடரமைப்பு&oldid=2224473" இலிருந்து மீள்விக்கப்பட்டது