ஜெபர்சன் டேவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெபர்சன் டேவிஸ்
Jefferson Davis
இடைக்கால அரசுத்தலைவர்/அமெரிக்க மாநிலங்கள் கூட்டமைப்பின் அரசுத்தலைவர்
பதவியில்
பெப்ரவரி 18, 1861 – மே 5, 1865
Vice Presidentஅலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ்
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்பதவி ஒழிக்கப்பட்டது
23ஆவது போர்ச் செயலர்
பதவியில்
மார்ச் 7, 1853 – மார்ச் 4, 1857
குடியரசுத் தலைவர்பிராங்கிளின் பியர்ஸ்
முன்னையவர்சார்ல்ஸ் மாகில் கான்ராட்
பின்னவர்ஜான் புக்கனன் புளோய்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1808-06-03)சூன் 3, 1808
கிறிஸ்டியன் கவுண்டி, கென்டக்கி
இறப்புதிசம்பர் 6, 1889(1889-12-06) (அகவை 81)
நியூ ஓர்லீன்ஸ், லூசியானா
அரசியல் கட்சிஜனநாயகக் கட்சி
துணைவர்(s)சாரா நொக்ஸ் டெய்லர்
வரீனா ஹோவெல்
தொழில்போராளி, அரசியல்வாதி
கையெழுத்து

ஜெபர்சன் ஃபினிஸ் டேவிஸ் என்னும் முழுப்பெயர் கொண்ட ஜெபர்சன் டேவிஸ் (ஜூன் 3, 1808 - டிசம்பர் 6, 1889) அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவராகச் செயலாற்றிய ஒரு அமெரிக்க அரசியல்வாதி ஆவார். உள்நாட்டுப் போர் நடைபெற்ற 1861 தொடக்கம் 1865 வரையான காலப்பகுதி முழுவதும் இவரே கூட்டமைப்பின் அரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவரது காலத்தில், பெரியதும், தொழில் வளர்ச்சியில் மேம்பட்டதுமாக இருந்த ஐக்கிய அமெரிக்க நாடுகளைத் தோற்கடிப்பதற்கான வழிமுறைகளை இவரால் கண்டறிய முடியவில்லை. பெரும் தோல்விகளைச் சந்தித்த போதிலும், விடுதலை பெறுவதில் இவர் விடாப்பிடியாக இருந்ததால் உள்நாட்டுப்போர் நீண்டுகொண்டே சென்றது. போரின் பின் இவர் மதிப்பு இழந்துவிட்டதாகச் சொல்ல முடியாதாயினும், தென் மாநிலங்களில் இவரது செல்வாக்கை இவரது தளபதியான ராபர்ட் ஈ. லீயின் புகழ் மறைத்து விட்டது எனலாம்.

1865 ஆம் ஆண்டில் டேவிஸ் பிடிபட்டபின்னர் இவர்மீது வழக்குத் தொடரப்பட்டது ஆயினும், சதிக் குற்றச்சாட்டுக்காக இவர் தண்டிக்கப்படாமல் பொதுப் பதவிகளுக்காகப் போட்டியிடும் இவரது உரிமை பறிக்கப்பட்டது. இவர் இறந்து 89 ஆண்டுகளுக்குப் பின், 1978 ஆம் ஆண்டு, இந்தப் பறிப்பு நீக்கப்பட்டது.

வெஸ்ட் பொயிண்டில் கல்வி கற்ற இவர் மெக்சிக்க-அமெரிக்கப் போரில், தொண்டர் போர்ப்படையில் கர்னலாக இருந்து அனுபவம் பெற்றவர். பிராங்ளின் பியர்சின் கீழ் ஐக்கிய அமெரிக்காவின் போர்ச் செயலராகவும் பதவி வகித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெபர்சன்_டேவிஸ்&oldid=2923539" இலிருந்து மீள்விக்கப்பட்டது