திருக்குவளை

ஆள்கூறுகள்: 10°35′02″N 79°42′45″E / 10.5839588°N 79.7125241°E / 10.5839588; 79.7125241
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்குவளை
Thirukkuvalai

திருக்குவளை
சிற்றூர்
திருக்குவளை Thirukkuvalai is located in தமிழ் நாடு
திருக்குவளை Thirukkuvalai
திருக்குவளை
Thirukkuvalai
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°35′02″N 79°42′45″E / 10.5839588°N 79.7125241°E / 10.5839588; 79.7125241
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
பரப்பளவு
 • மொத்தம்7.291 km2 (2.815 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,255
 • அடர்த்தி580/km2 (1,500/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு610204[1]
தொலைபேசி குறியீடு04365
வாகனப் பதிவுTN 51
கல்வியறிவு80%
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதிகீழ்வேளூர்

திருக்குவளை (ஆங்கிலம்:Thirukkuvalai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமமாகும்.

இந்த ஊரானது இங்கு உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்காகவும், மு. கருணாநிதிக்காகவும் அறியப்படுகிறது. திருக்குவளையில்தான் மு. கருணாநிதி பிறந்தார். அவர் பிறந்த வீடானது தற்போது நூலகமாக பராமரிக்கப்படுகிறது.[2]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3674 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 1834 ஆண்கள், 1840 பெண்கள் ஆவார்கள். திருக்குவளை மக்களின் சராசரி கல்வியறிவு 21.48% ஆகும்.

2011, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 4255 ஆகும். மேலும் இந்த ஊரில் 1161 குடும்பங்கள் வாழ்கின்றன, இதில் ஆண்கள் 2135, பெண்கள் 2120 ஆவர். இதன்படி பாலின விகிதமானது 993 என்று உள்ளது. மக்கள் தொகையில் 10.62 விழுக்காட்டினர் ஆறு வயதுக்குட்பட்டவர்களாவர். கல்வியறிவு விகிதம் 80.94 விழுக்காடாகும். கல்வியறிவில் ஆண்களின் விகிதம் 88.21 விழுக்காடாகவும், பெண்களின் விகிதம் 73.74 விழுக்காடாகவும் உள்ளது. கல்வியறிவு விகிதமானது ஏறக்குறைய மாநில விகித்தமான 80.09க்கு இணையானக உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://pincode.city/india/tamil-nadu/nagapattinam/tirukuvalai
  2. "கருணாநிதி மறைவு: திருக்குவளையில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி". செய்தி. தினமலர். 8 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2018.
  3. Rural - Nagapattinam District;Thirukkuvalai Taluk;Thirukuvalai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
  4. "Thirukuvalai Population - Nagapattinam, Tamil Nadu". 2011 Census of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குவளை&oldid=3717760" இலிருந்து மீள்விக்கப்பட்டது