உழைப்புச் சொத்துக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழைப்புச் சொத்துக் கோட்பாடு (Labor theory of property) என்பது ஒரு இயற்கை வளத்தை ஒருவர் தனது உழைப்பின் மூலம் செப்பப்படுத்தினால், அந்த வளத்திற்கான உடைமை அவரையே சாரும் என்பதாகும். இந்தக் கருத்துரு அரசியல் அறிஞர் யான் லாக் அவர்களாக் முதலில் விரிவாக விளக்கப்பட்டது. ஒருவரின் முதன்மை உடைமை தாமே, அதனால் அவரின் உழைப்பு அவருக்கு சொந்தமானது. அந்த உழைப்பை அவர்கள் இயற்கை வளங்கள் அல்லது பொருட்கள் மீது செலுத்தும் போது, அந்தப் பொருட்கள் அல்லது வளங்கள் அவரின் உடைமை ஆகின்றன என்பதுவே யான் லாக்கின் வாதம் ஆகும். இந்தக் கோட்பாடு மேற்குலகிலேயே பெரிதும் வடிவம் பெற்றது. மாற்றாக வட அமெரிக்க முதற்குடிமக்கள் உழைப்பைச் செலுத்தினாலும் தனியிரிமை கொண்ட உடைமையாக நிலத்தைக் கருதவில்லை.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]