சேரன் (திரைப்பட இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேரன்
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் மாணவர்களுக்கு சேரன் உரையாற்றுகின்றார்,
தாய்மொழியில் பெயர்சேரன்
பிறப்புதிசம்பர் 12, 1965 (1965-12-12) (அகவை 58)
கொழிஞ்சிப்பட்டி, மேலூர், மதுரை, தமிழ்நாடு
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்போது வரை
பெற்றோர்பாண்டியன்,
கமலா
விருதுகள்மூன்று (தேசிய விருதுகள்)
வலைத்தளம்
www.directorcheran.com

சேரன் (Cheran, பிறப்பு: திசம்பர் 12, 1965) என்பவர் தமிழ்நாட்டை திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சொல்ல மறந்த கதை (2000), தவமாய் தவமிருந்து (2005), பொக்கிசம் (2009), முரண் (2011) போன்ற பல திரைப்பட ங்களிலும் கதாநாகனாக நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

பிறப்பும் ,இளமை பருவமும்[தொகு]

சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார்.

இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார்.

சினிமாவில் வேலையும் ,ஆர்வமும்[தொகு]

திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இயக்குனர்[தொகு]

உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன் மற்றும் மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து அதை தொடர்ந்து பொற்காலம் (1999), வெற்றிக் கொடி கட்டு (2000), பாண்டவர் பூமி (2001) போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே திரைப்படம் இயக்கினார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006), ஆடும் கூத்து (2007), முரண் (2011) போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

நடிகர்[தொகு]

2002 ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர் பச்சான் என்பவர் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார். பின்னர் பொக்கிசம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது. அழைப்புக் கடிதம் பிரச்சனையால் அதுவும் கைவிடப்பட்டு, பின்னர் அதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2004 இல் ஆரம்பித்த பொக்கிசம் இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் (2008), ராமன் தேடிய சீதை (2008), யுத்தம் செய் (2011), திருமணம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடிகராக நடித்தார்.

விமர்சனம்[தொகு]

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் "இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது..."[1] என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது.[2] பின்னர், தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான் ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களையும் அல்ல என சேரனால் மறுப்பு வெளியிடப்பட்டது.[3] ஆயினும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சேரன் போராட்டத்தையும் முறையற்ற டிவிடி விடயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தையும் போராட்டத்தையும் சேர்க்க வேண்டாம் என்றும், அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக என்பதில் சில அல்லது குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளிக்கப்பட்டது.[4][5]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் காதாபாத்திரம் பங்கு குறிப்புகள்
இயக்குனர் நடிகர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
1997 பாரதி கண்ணம்மா Green tickY Green tickY
பொற்காலம் புகைப்படக்காரர் Green tickY Green tickY
1998 தேசிய கீதம் Green tickY Green tickY
2000 வெற்றிக் கொடி கட்டு Green tickY Green tickY
2001 பாண்டவர் பூமி Green tickY Green tickY
2002 சொல்ல மறந்த கதை சிவதாணு Green tickY
2004 ஆட்டோகிராப் செந்தில் Green tickY Green tickY Green tickY Green tickY
2005 தவமாய் தவமிருந்து ராமலிங்கம் முத்தையா Green tickY Green tickY Green tickY
2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது Green tickY
2007 மாயக்கண்ணாடி Kumar Green tickY Green tickY Green tickY
ஆடும் கூத்து ஞானசேகரன் Green tickY Green tickY
2008 பிரிவோம் சந்திப்போம் நடேசன் Green tickY
ராமன் தேடிய சீதை வேணுகோபால் Green tickY
2009 பொக்கிசம் லெனின் Green tickY Green tickY Green tickY
2011 யுத்தம் செய் ஜெ. கிருஷ்ணமூர்த்தி Green tickY
முரண் நந்தா Green tickY Green tickY
2013 சென்னையில் ஒரு நாள் சத்யமூர்த்தி Green tickY
மூன்று பேர் மூன்று காதல் குணசேகர் Green tickY
2014 கதை திரைக்கதை வசனம் இயக்கம் அவராகவே Green tickY
2015 ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை Green tickY Green tickY Green tickY பாடலாசிரியர்
2016 ராஜாதி ராஜா Green tickY Green tickY Green tickY தெலுங்குத் திரைப்படம்
2019 திருமணம் அறிவுடைநம்பி Green tickY Green tickY Green tickY
2020 மிக மிக அவசரம் பாடலாசிரியர்[6]
2020 ராஜாவுக்கு செக் ராஜா Green tickY

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
2019 பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை தமிழர்களுக்கு போராடியது அரு வெறுப்பாக இருக்கிறது - சேரன்". பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  2. "Controversial: Film-maker Cheran Says Sri Lankan Tamilians Are Responsible For Piracy!". பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  3. "Cheran clarifies about his speech against Sri Lankan Tamils". பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  4. "ஈழமக்களுக்காக உண்ணாவிரதம் இருந்த சேரனை நினைக்கையில் அருவருப்பாக இருக்கிறது!". பார்க்கப்பட்ட நாள் 26 August 2016.
  5. "ஈழத்தமிழர் பற்றிய சேரனின் சாடலுக்கு இலங்கை ரசிகர்கள் கொந்தளிப்பு!". Archived from the original on 28 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Subramanian, Anupama (7 September 2017). "Cheran turns lyricist!". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.

வெளி இணைப்புகள்[தொகு]