சுப்பிரமணியம் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்பிரமணியம் சீனிவாசன்
Subramaniam Srinivasan
இந்திய அஞ்சல் தலை
பிறப்பு(1903-01-04)சனவரி 4, 1903
திருத்துறைப்பூண்டி, திருவாரூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புஆகத்து 26, 1969(1969-08-26) (அகவை 66)
மதராசு, தமிழ்நாடு, இந்தியா

சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (S. S. Vasan, சனவரி 4, 1903 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படுபவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் . இவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது.[1] ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.

1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே. அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

வாசன் இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
1948 சந்திரலேகா தமிழ் ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி -
1948 சந்திரலேகா இந்தி ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி -
1949 நிஷான் இந்தி பி. பானுமதி, ரஞ்சன் -
1951 சன்சார் இந்தி டேவிட் ஏபிரகாம்
1952 மிஸ்டர் சம்பத் இந்தி மோதிலால், பத்மினி -
1954 பாகுட் டின் ஹூயே இந்தி மதுபாலா
1955 இன்சானியாட் இந்தி திலிப் குமார் -
1958 வஞ்சிக்கோட்டை வாலிபன் தமிழ் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி -
1958 ராஜ் திலக் இந்தி ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா -
1959 பாயிகம் இந்தி திலிப் குமார், வைஜயந்திமாலா -
1960 இரும்புத்திரை தமிழ் சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா -
1961 கர்ணா இந்தி ராஜேந்திர குமார், ராஜ் குமார் -
1967 அவுரத் இந்தி ராஜேஷ் கண்ணா, பத்மினி -
1968 தீன் பகுரானியன் இந்தி பிருத்விராஜ் கபூர் -
1969 சத்ரஞ் இந்தி ராஜேந்திர குமார் -

வாசன் தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்புகள்
1953 ஔவையார் தமிழ் கே. பி. சுந்தராம்பாள் -

உசாத்துணைகள்[தொகு]

  1. "பசுபதிவுகள்: எஸ். எஸ். வாசன் - 2". web.archive.org. 2018-04-10. Archived from the original on 2018-04-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]