என்.பி.ஏ. தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்.பி.ஏ. தேர்தல் (NBA Draft) ஆண்டுதோறும் என்.பி.ஏ.-இல் நடக்கும் நிகழ்வு ஆகும். என்.பி.ஏ.-இல் விளையாட எதிர்பார்க்கிற ஆட்டக்காரர்களை 30 என்.பி.ஏ. அணிகளும் தெரிந்து கொள்ளும். இந்த ஆட்டக்காரர்களின் பெரும்பான்மை அமெரிக்காவில் கல்லூரிக் கூடைப்பந்தாட்டம் விளையாடி என்.பி.ஏ.-ஐ சேரப்பார்க்கிறார்கள், ஆனால் வேறு நாடுகளிலிருந்தும் சில ஆட்டக்காரர்கள் இந்த நிகழ்வில் தெரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

2005 வரை உயர்பள்ளியிலிருந்து நேரடியாக கல்லூரியுக்கு போகாமல் என்.பி.ஏ.-ஐ ஆட்டக்காரர்களால் சேரமுடிந்தது. லெப்ரான் ஜேம்ஸ், கோபி பிரயன்ட், மற்றும் பல்வேறு தலைசிறந்த என்.பி.ஏ. வீரர்கள் இப்படி என்.பி.ஏ.-ஐ சேர்ந்தனர். ஆனால் 2005இல் என்.பி.ஏ. ஆணையர் டேவிட் ஸ்டர்ன் என்.பி.ஏ. தேர்தலில் சேரப்பார்க்க 19 வயது இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

என்.பி.ஏ. தேர்தலில் இரண்டு சுற்றுகள் உள்ளன. ஒரு சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டக்காரரை தெரிந்து கொள்ளும். ஒரு சுற்றில் கடைசி 16 நிலைகளில் போன பருவத்தில் 16 பிளேயாஃப்ஸ் (Playoffs) சேர்ந்த அணிகள் தெரிந்து கொள்ளும்; இதில் மிகவும் போட்டிகளை வெற்றிபெற்ற அணிகள் கடைசியாக தெரிந்து கொள்ளும். முதல் 14 நிலைகளில் மிகவும் போட்டிகளில் தோற்றுப்போன அணிகள் தெரிந்து கொள்ளும். இந்த அணிகளின் வரிசை என்.பி.ஏ. தேர்தல் லாட்டரியால் தீர்மானப்பட்டது. ஒரு அணியால் தன் தெரிவிட நிலையை வேறு அணியுக்கு கொடுத்து அந்த அணியிலிருந்த வீரரை கூட்டல் செய்யமுடியும். இது போன்ற வியாபாரங்கள் பல என்.பி.ஏ. தேர்தல்களில் நடக்கும்.

பொதுவாக ஜூன் மாதத்தில் என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள் முடிந்ததுக்கு பிறகு என்.பி.ஏ. தேர்தல் நடைபெறும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்.பி.ஏ._தேர்தல்&oldid=3593787" இலிருந்து மீள்விக்கப்பட்டது