தாமஸ் சாம்பெர்லெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமஸ் சாம்பெர்லெய்ன் (Thomas Chamberlayne , பிறப்பு: 1805 , இறப்பு: அக்டோபர் 21 1876), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 15 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1842-1849 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

இளமைக்காலம்[தொகு]

இவர் வண. தோமஸ் சாம்பர்லெய்னுக்கும் மரியா ஃபிரான்சிசுக்கா வாக்கர் என்பவருக்கும் மகனாக 1805 ஏப்ரல் 12 ஆம் தேதி கென்டிலுள்ள கார்ல்ட்டனில் பிறந்தார். இவர் 1830 இல், தொழில்சாராத் துடுப்பாட்ட விளையாட்டு வீரர் டென்சில் ஒன்சுலோ என்பவரின் மகளான அமெலியா ஒன்சுலோ என்பவரைத் திருமணம் செய்தார்.[1]

இறப்பு[தொகு]

சாம்பெர்லெய்ன் கிரன்பரி பார்க் என்னும் அவரது இல்லத்தில் 1876 அக்டோபர் 21 ஆம் தேதி காலமானார்.

குறிப்புகள்[தொகு]

  1. Leonard, A.G.K. (1984). Stories of Southampton Streets. Paul Cave Publications. பக். 72 & 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86146-041-3. 

வெளி இணைப்பு[தொகு]

தாமஸ் சாம்பெர்லெய்ன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 19 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_சாம்பெர்லெய்ன்&oldid=3800766" இலிருந்து மீள்விக்கப்பட்டது