துத்திக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்திக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
ஆன்ஜியோஸ்பெர்ம்ஸ்
தரப்படுத்தப்படாத:
யூடிகாட்ஸ்
தரப்படுத்தப்படாத:
ரோசிட்ஸ்
வரிசை:
மால்வாலேஸ்
குடும்பம்:
மால்வேசியே
பேரினம்:
அபுடிலான்
இனம்:
ஏ. இண்டிகம்
இருசொற் பெயரீடு
அபுடிலான் இண்டிகம்
(லிங்க்) சுவீட்[1]
வேறு பெயர்கள்

சிடா இண்டிகா கரோலஸ் லின்னேயஸ்

துத்திக்கீரை அல்லது வட்டத்துத்தி (Abutilon indicum , Indian Mallow) என்பது புதர் வகையைச் சார்ந்த செடி ஆகும். துத்தி விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. துத்திக்கீரையில் இலை, வேர், பட்டை, பூ ஆகியவை பயன் தரும் பகுதிகள் ஆகும். இதில் சிறுதுத்தி, மலைத்துத்தி, பெருந்துத்தி, வாசனைத்துத்தி, அரசிலைத்துத்தி, கருந்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத் துத்தி எனப் பல வகைகள் உள்ளன.

பெயர்கள்[தொகு]

இதற்கு கக்கடி, கிக்கசி, அதிபலா போன்ற வேறுபெயர்களும் உண்டு. ‘துத்தி’ என்றால் உண்ணக்கூடியது என்ற பொருளை அகராதி தருகிறது.

விளக்கம்[தொகு]

துத்தியானது புதர்ச் செடி வகையாகும். இது அகன்ற இதய வடிவமுடைய இலைகளைக் கொண்டதாகவும், அதன் விளிம்புகளில் இரம்பங்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டதாக காணப்படும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரோம வளரிகள் உள்ளன. சிறுபிளவுகள் கொண்ட பெரிய ‘தோடு’ போன்ற இதன் காய்கள் வித்தியாசமான தோற்றம் கொண்டவை.[2]

பயன்கள்[தொகு]

இந்தக் கீரை மூலம் நோய்க்கு உள், வெளி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abutilon indicum". Pacific Island Ecosystems at Risk. பார்க்கப்பட்ட நாள் 2008-06-18.
  2. டாக்டர் வி.விக்ரம் குமார் (11 ஆகத்து 2018). "நோயைத் துரத்தும் துத்தி". கட்டுரை. டாக்டர் வி.விக்ரம் குமார். பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2018.
  3. (in ta) பச்சை வைரம் 27: மூல நோய்க்கு உணவாகும் துத்திக் கீரை. 2024-04-06. https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/1226759-abutilon-indicum-food-for-hemorrhoids.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்திக்கீரை&oldid=3937014" இலிருந்து மீள்விக்கப்பட்டது