நினைத்ததை முடிப்பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினைத்ததை முடிப்பவன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புசரோஜினி சந்திரகுமார்
ஓரியண்டல் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
மஞ்சுளா
லதா
வெளியீடுமே 9, 1975
நீளம்4517 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

எம்,ஜியார் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருந்தார்.

சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைத்ததை_முடிப்பவன்&oldid=3677891" இலிருந்து மீள்விக்கப்பட்டது