தேவனாஞ்சேரி

ஆள்கூறுகள்: 11°1′36″N 79°22′50″E / 11.02667°N 79.38056°E / 11.02667; 79.38056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவனாஞ்சேரி
தேவனாஞ்சேரி
இருப்பிடம்: தேவனாஞ்சேரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°1′36″N 79°22′50″E / 11.02667°N 79.38056°E / 11.02667; 79.38056
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
ஊராட்சி தலைவர் ராஜாராம் S[சான்று தேவை]
மக்கள் தொகை 2,737 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தேவனாஞ்சேரி (ஆங்கிலம்: Devanancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

தேவனாஞ்சேரி தஞ்சாவூரிலிருந்து வடக்கே 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 8 கி. மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 282 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.அத்தியூர் (Athiyur)(2 கிமீ), கல்லூர் (3 கிமீ), நீரத்தநல்லூர் (3 கிமீ), திருநல்லூர் (1 கிமி) ஆகியவை அருகில் உள்ள கிராமங்கள்.தேவனாஞ்சேரி கிழக்கு நோக்கி திருவிடைமருதூர் வட்டம், தெற்கு நோக்கி கும்பகோணம் தாலுகா, மற்றும் தெற்கு நோக்கி வலங்கைமான் தாலுக்கா, கிழக்கு நோக்கி திருப்பணந்தாள் தாலுகா சூழப்பட்டுள்ளது.

மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அத்தியூரில் 1376 ஆண்கள் மற்றும் 1361 பெண்கள் 2737 மொத்த மக்கள் தொகை ஆக இருந்தது.எழுத்தறிவு விகிதம் 68.07 ஆக இருந்தது.இது கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் கீழ் வருகிறது.

விவசாயம்[தொகு]

கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது.விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறது. தேவனாஞ்சேரியில் நெல்,கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது.

கல்வி[தொகு]

ஆரம்ப மற்றும் உதவி பெறும் நடுநிலை பள்ளி,மினர்வா ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கல்வி வழங்குகிறது. கல்லூரிகள்: அன்னை கலை மற்றும் அறிவியல் அன்னை கல்லூரி முகவரி: கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர்.

எஸ்.கே.எஸ்.எஸ் கலை கல்லூரி முகவரி: திருப்பனந்தாள் கும்பகோணம் தஞ்சாவூர்.

மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முகவரி:கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர்.

அரசு பொறியியல் கல்லூரி முகவரி: கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர்.

போக்குவரத்து[தொகு]

கும்பகோணம் ரயில் நிலையம் தேவனாஞ்சேரி மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். எனினும் தஞ்சாவூர் ரயில் நிலையம் தேவனாஞ்சேரியின் அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும், 44 கி.மீ. தொலைவில் உள்ளது.கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவனாஞ்சேரி&oldid=3480653" இலிருந்து மீள்விக்கப்பட்டது