நானோ தானியங்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நானோ தானியங்கியல் ( nanorobotics) என்பது நானோ மீட்டர் (10-9 மீட்டர்) அளவிலான மிக நுண்ணிய இயந்திரங்கள் பற்றிய இயல் . இதனை உயிரியல் துறையில் பெரிதும் பயன்படுத்தலாம். இதன் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப பெயர் மாற்றப்படுகிறது. பொதுவாக இந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் இயந்திரங்களை நானோ தானியங்கி என்று சொல்வார்கள்.

நானோ தானியக்கியம்[தொகு]

நானோ தானியங்கி மிக நுண்ணியதாக இருப்பதினால் நுட்பமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் . இவை நானோ மரபணு , நானோ எறும்பு என்று இதன் வளர்ச்சி பெருகுவதுடன் , மரபணு , பக்டிரியா போன்ற நுண் உயிரி அல்லது நுண் பொருட்களை மாற்றி அமைக்க பயன்படும் . நானோ தொழில்நுட்பத்தினால் பல ஆச்சரியப்படும் நுண் பணிகளை செய்ய முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். நானோ இயந்திரங்கள் இன்னும் கணிணி மாதிரிகளாக கூட முழுமையாக வடிவமைக்கப்படவில்லை.ஒரு சில நானோ இயந்திர பகுதிக்கூறுகள் மட்டுமே கணிணி மாதிரிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.அத்தகைய மாதிரிகளுக்கும் உறுதியான தாழ் ஆற்றல் வடிவ நிலைகள்(optimized energy state) இன்னும் காணப்பட முடியவில்லை.மேலும் இத்தகைய ஆற்றல் நிலைகளை கணக்கிட பல நூறு மணி நேர அவகாசம் தேவை.

இதனால் எதிர்கால நானோ தொழில்னுட்பத்தின் வளர்ச்சியே திறன் வாய்ந்த கணிணிகளை(super computers) சார்ந்துள்ளது.மேலும் இத்தகைய அணு பரிமான நுன் கட்டுப்பாடுகளுக்கு அணுவிலும் அளவு குறைவானவற்றை அதாவது மின் கூடுகளை (orbitals) கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

ஆனால் இதுவறை அவைகளின் இயக்கங்கள் உயிரி சார் பொருட்களின் ஊடே எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய கட்டுரைகள் உள்ளன.

நானோ அணுகுமுறைகள்[தொகு]

பயோ-சிப் (biochip)

நுபாட் ( nubots) அல்லது நானோ மரபணு

பக்டிரியால் அடிப்படையில்

நானோ மருந்து ( nano medicine)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோ_தானியங்கியல்&oldid=3161051" இலிருந்து மீள்விக்கப்பட்டது