பசீர் ரிஸ் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசிர் ரிஸ் பூங்கா சிங்கப்பூரில் உள்ள ஒரு கடற்கரை சார்ந்த பூங்கா ஆகும். இது சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. 71 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த பூங்காவினுள் 6 ஹெக்டேர் நிலத்தில் ஒரு சதுப்பு நில காடும் உள்ளது. இதன் மொத்த நீளம் 6.6 கி.மீ ஆகும்.

பொழுது போக்கு அம்சங்கள்[தொகு]

பலகை நடைபாதை வசதியுடன் கூடிய இந்த பூங்காவில், சேற்றை சார்ந்து வாழும் நண்டுகள், மீன்கள் , தாவரங்கள் போன்றவற்றை காணலாம். பறவைகளை காண்பதற்காக இங்கு மூன்று அடுக்கில் ஒரு கண்காணிப்பு கோபுரமும் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் விளையாட்டு திடல்களும், மற்ற பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன.

இங்கு செல்ல[தொகு]

இந்த பூங்காவிற்கு செல்ல எஸ்.பி.எஸ் போக்குவரத்து கழகத்தின் சேவை எண் 403 பேருந்தில் பயணிக்கலாம். இந்த பேருந்துகளை எடுப்போர் பாசிர் ரிஸ் பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சிங்கப்பூரின் கடற்கரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசீர்_ரிஸ்_பூங்கா&oldid=3273477" இலிருந்து மீள்விக்கப்பட்டது