ஆர்க்வியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்க்வியூ (ஆங்கிலம்: ArcView) சூழலை ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனத்தின் ஓர் புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளாகும். இதன் முழுப் பெயரானது ஆர்க்வியூ ஜிஐஎஸ் (ArcView GIS). பெரும்பாலானவர்களால் ஆர்க்ஜிஐஎஸ் (ArcGIS) மென்பொருளால் மாற்றீடு செய்ததாகக் கருதினாலும் இன்றளவும் இம்மென்பொருள் இதை ஆக்கிய நிறுவனத்தால் தொழில் நுட்ப வசதிகள் அளிக்கப் பட்டே வருகின்றது.

சரித்திரமும் மென்பொருள் விபரமும்[தொகு]

சூழலை ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனத்தின் ஏனைய மென்பொருடகளினால் உருவாக்கப் பட்டதைப் பார்ப்பதற்கோ இம்மென்பொருளானது ஆரம்பத்தில் உருவாக்கப் பட்டது. காலப் போக்கில் பல்வேறு வசதிகள் உட்புகுத்தப் பட்டு ஓர் முழுமையான ஓர் புவியியல் தகவற் தொழில் நுட்ப மென்பொருளாக உருவெடுத்தது. இதன் எளிமையான இடைமுகமத்தால் பலம் வாய்ந்த இன்றைய ஆர்க் இன்போ வைவிட பலராலும் விரும்பப்படுகின்றது.

ஆர்க்வியூ 3.x[தொகு]

ஆர்க்வியூ 3.3 இன்றும் கிடைக்கின்றது. பல பயனர்கள் இன்றும் பழைய ஆர்க் ஜிஐஎஸ் மென்பொருளைப் பாவித்து வருகின்றனர். இதன் 3.3 பதிப்பானது மே, 2002 வெளிவந்தது. இது விண்டோஸ் மற்றும் யுனிக்ஸ் இயங்கு தளங்களை ஆதரிக்கின்றது., ஆர்க்வியூ 3.3 விண்டோஸ் XP இயங்குதளத்தை ஆதரித்தாலும் அது சரியாக இயங்குவதற்கு சிறு மென்பொருட் திருத்தம் ஒன்றைப் பிரயோகிக்க வேண்டும்

ஆர்க்வியூ 8.x மற்றும் 9.x[தொகு]

இதிலுள்ள ஆர்க்வியூவானது ஆர்க்ஜிஐஎஸ் இன் ஓர் அங்கமாகும். இவ்வங்கத்துள் ஆர்க்வியூவே மிகக் குறைந்த மென்பொருள் அனுமதி தேவைப்படுகின்றது புவியியல் தகவற் தொழில் நுட்பத்தில் இடைநிலையில் ஆர்க் எடிற்ரர் மற்றும் இதன் உயர்நிலையில் ஆர்க் இன்போ மென்பொருளானது உள்ளது,.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்வியூ&oldid=3233135" இலிருந்து மீள்விக்கப்பட்டது