மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடுபன்மொழி இடைமுகப் பொதிக்கான சேவைப் பொதி 3 / செப்டம்பர் 18 2007 (2007-09-18); 6057 தினங்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைவிண்டோஸ் 2000 சேவைப்பொதி 3, விண்டோஸ் எக்ஸ்பி உம் அதற்குப் பிந்தையதும்.
தளம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்
மென்பொருள் வகைமைஅலுவலக மென்பொருள்
உரிமம்மூடிய மென்பொருள் EULA
இணையத்தளம்மைக்ரோசாப்ட் ஆபிஸ்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் அலுவலகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது 17 நவம்பர் 2003 இல் வெளியிடப்பட்டது. இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்பி இன் வழிவந்தது. இதனைத் தொடர்ந்து ஆபிஸ் 2007 வெளிவந்தது. இதுவே மைக்ரோசாப்ட் ஆபிஸ் பிரயோகங்களில் ரூல்பார் (Toolbar) ஐ உபயோகித்த கடைசிப் பதிப்பாகும். மைக்ரோசாப்ட் இன்போபாத் மற்றும் வன்நோட் ஆகிய இரண்டும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதன்முதலாக விண்டோஸ் எக்ஸ்பி போன்ற ஐகான்களைப் பாவித்த பிரயோகமும் ஆகும். ஆபிஸ் 2003 இல் எரிதங்களை வடிகட்டும் கருவி மிகவும் மேம்படுத்தபட்ட நிலையில் அறிமுகப்படுத்தப் பட்டது. இதுவே விண்டோஸ் 2000 இயங்குதளத்தை ஆதரித்த கடைசி ஆபிஸ் பதிப்பும் ஆகும்.

ஆகக்குறைந்த தேவைகள்[தொகு]

இயங்குதளம்[தொகு]

  • விண்டோஸ் 2000 சேவைப் பொதி 3 அல்லது அதற்குப் பிந்தைய சேவைப் பொதி
  • விண்டோஸ் எக்ஸ்பி
  • விண்டோஸ் விஸ்டா
  • விண்டோஸ் சர்வர் 2003
  • விண்டோஸ் சர்வர் 2008

மையச்செயலி[தொகு]

ஆகக்குறைந்தது 233மெஹா ஹேட்ஸ் உள்ள மையச் செயலி. மைக்ரோசாப்ட் இண்டல் பெண்டியம் !!! செயலியை அல்லது அதனைவிட வேகமான செயலியைப் பரிந்துரைக்கின்றது.

நினைவகம்[தொகு]

தற்காலிக நினைவகம்[தொகு]

ஆகக்குறைந்தது 128 மெகாபைட்ஸ் நினைவகமாவது இருத்தல் வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட ஆபிஸ் பிரயோகங்களை இயக்குவதற்கு ஒவ்வொரு பிரயோகத்திற்கும் 8 மெகாபைட் தேவைப்படும்.

வன்வட்டு[தொகு]

வன்வட்டில் ஆகக்குறைந்தது 400 மெகாபைட் இடமாவது இருத்தல் வேண்டும். நிறுவற் தேர்வுகளைப் பொறுத்து வேண்டிய இடவசதி மாறுபடும்.

மானிட்டர்[தொகு]

800x600 ரெசலூஷன் உள்ள சூப்பர் விஜிஏ மானிட்டர். ஆகக்குறைந்தது 256 நிறமாவது இருத்தல் வேண்டும்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_ஆபிஸ்_2003&oldid=2207881" இலிருந்து மீள்விக்கப்பட்டது