லுடொவிக் ஹப்ளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லுடொவிக் ஹப்ளர்(Ludovic Hubler) பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த பயணி.தன் கையிலிருந்து பயணத்திற்காக ஐந்து பைசா கூட செலவழிக்காமல் உலகம் முழுவதையும் கடந்த ஒரு மனிதன். காசிருந்தால் மட்டுமே பயணம் செல்ல முடியும் என்பதைத் தாண்டி அடுத்த மனிதர்கள் மீது உள்ள நம்பிக்கையாலும் உலகைச் சுற்ரிவர முடியும் என்பதற்குச் சான்றாக சாலையில் எதிர்ப்படும் வாகனங்களிடம் உதவி கேட்டு மட்டுமே 17,00,000 கிலோ மீட்டர் தூரம் கடந்த சாதனயாளர். 59 நாடுகள் 1825 நாட்கள் மகிழுந்து, டிரக், ஒட்டகம், கழுதைச் சவாரி, படகு என தன்னைக் கடந்து செல்லும் எந்த வாகனமாக இருப்பினும் நிறுத்தி உதவி கேட்டு உலகைச் சுற்றிய மனிதர்.இவரது உலகப் பயணத்தைச் சாத்தியமாக்கியவர்கள் 1300 வாகன ஓட்டிகள். சில வாகனங்களில் 200 முதல் 500 கி.மீ. வரை கூட பயணம் செய்தவர்.தன்து பயன பட்டறிவுகளை நூலாக எழுதியவர். அதற்காக 2010 ஆம் ஆண்டிற்கான 'பியர் லோட்டி' என்ற விருதினைப் பெற்றவர்.

இளமை[தொகு]

லுடொவிக் ஹப்ளர் 1977 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11-ல் மானிக்ஹப்ளர்-ஜாக்குவிஸ் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கிழக்கு பிரெஞ்சில் வளந்த இவர் இளமையிலேயே கால்பந்து விளையாட்டிலும் புவியியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 2002 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்க் கல்லூரியில் நிர்வாகவியலில் படம் பெற்றார்.

வரலாறு[தொகு]

பட்டம் பெற்றதும் தொழில் சந்தையில் நுழைவதற்கு முன் உலகின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று எண்ணிய லுடொவிக் ஹப்ள தனது போக்குவரத்திற்கு சாலையில் செல்லும் வானங்களின் உதவியைப் பயன்படுத்தி மட்டுமே உலகின் ஒரு சுற்றுப்பயணத்தை தொடங்குவது எனத் தீர்மானித்ததார். 2003 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கிய போது தனது நண்பர்களுடன் ஆல்ப்ஸ் மலியிலிருந்து தனது முதலடியை லுடோவிக் துவங்கினார். அப்போது இவருக்கு வயது 25. ஆல்ப்ப்ஸ் மலையில் பயணம் துவங்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும் தனது சொந்த செலவில் எந்த வாகனத்திலும் பயணம் செய்யக்கூடாது எனவும் தான் மேற்கொள்ளும் இலவசப் பயணங்கள் உத்தேசித்துள்ல நகரின் பெட்ரோல் பங்க் வரை மட்டுமே, அதன் பிறகு இன்னொரு வாகனத்தை நாடிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தனது பயணத்தை லுடோவிக் துவங்கினார். இவர் படகுப் பயணம் மூலம் பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றைக் கடந்தார். பணிஉடைப்பு வண்டிகள் இவற்றின் மூலம் அன்டார்டிக்கா பிரதேசத்தைக் கடந்தார். மேலும் சஹாரா பாலைவனம், மற்றும் ஆப்கனிஸ்தான், கொலம்பியா போன்ற நாடுகளையும் தனது கட்டை விரல் ஒன்றினை மட்டும் பயன்படுத்தி கடந்தது சாதனை செய்தார். இக்காலத்தில் இவர் கற்பனையும் செய்து பார்த்திராத பல இக்கட்டான நேரங்களைக் கடந்து வந்துள்ளார்.

உதவிகள்[தொகு]

இவர் நினைத்தது போல் பயணம் அவ்வளவு எளிமையானதாக இல்லை. சில இடங்களில் கால் கடுக்க நாள் முழுவதும் நின்று கொண்டேயிருந்தால் ஏதேனும் ஒரு வாகனம் நிறுத்தப்படும். ஆனால் அவர்கள் எளிதில் வாகனத்தில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு மொழிப் பிரச்சனை வேறு. எனவே சில சமயங்களில் தன்னைப் பற்றிய குறிப்புகளை ஒரு அட்டையில் பல மொழிகளில் எழுதி அதனை நீட்டிக் காட்டுவதும் இவரது வழக்கமானது. ஆயினும் உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையான மனிதர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இவருக்கு உதவி செய்துள்ளனர். அவர்கள் பல நேரங்களில் தங்குமிடம் மற்றும் உணவு தந்து லுடோவிக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவரது பயணத்தில் உதவ முன்வந்த பெரும்பான்மையினர் எளிமையான அடித்தட்டைச் சேர்ந்த மகிழுந்து ஓட்டிகளே. அவர்கள் தங்களால் முடிந்த தூரத்திற்கு லுடோவிக்கை வாகனத்தில் கொண்டு இறக்கி விட்டிருக்கிறார்கள்.
தனது ஐந்தாண்டுப் பயனத்தில் வாகனத்தில் பயணம் செய்த நேரத்தை விட அதற்காக காட்திருந்த நேரமே அதிகம். லுடோவிக் ஆங்காங்கே 450 இடங்களில் தங்கியுருக்கிறார். சில நேரங்களில் காவலர்களிடமும் இராணுவத்திடமும் பிடிபட்டிருக்கிறார். இரவுக் காவல் என்று சிறைச் சாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். சில நேரங்களில் வெறு வழியின்றி பெண்களைப் போல பர்தா உடையணிந்தும் உதவி கேட்டு பயணம் செய்து இருக்கிறார்.

பயணப் பட்டறிவுகள்[தொகு]

  • இந்தியாவிற்கு வருகை புரிந்த லுடோவிக் டெல்லி, பனாரஸ், கொல்கொத்தா, மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் சுற்றி அலைந்திருக்கிறார். இந்தியாவைப் பற்றிய தனது அனுபவங்களையும், காந்திய ஈடுபாடு, அதிகமான மக்கள் ஆங்கிலம் பேசுவது, தன்னார்வ நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவைபற்றியும், இங்குள்ள மாறுபட்ட கலாச்சாரம் மீதான வியப்பு, திரைப்படங்கள், உணவு ஆகியவை பற்றியும் பதிவு செய்துள்ளார்.
  • தனது பயனத்தில் திபெத்திற்குச் சென்று தலாய் லாமாவைச் சந்தித்தது ஒரு முக்கிய நிகழ்வாகக் குறித்துள்ளார். அச்சமயத்தில் திபெத்திலிருந்து இமய மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் மக்கள் 2000 மைல் வரை நடந்தும் ஒவ்வொரு அடி எடுத்து வைத்தபிறகும் தலையால் பூமியை வணங்கியும் செல்வதைப் பற்றி விவரித்துள்ளார்.
  • பாகிஸ்தானில் நுழைவதற்கு அனுமதி கிடைக்காதபோது பிரெஞ்சு தூதரகம் இவரை திரும்பிச் செல்லும் படி வற்புறுத்தியுள்ளது ஆனால் தொடர்ந்து காத்திருந்து அனுமதி வாங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் பழகியுள்ளார்.
  • தனது பணத்தை வெறும் சாகசப் பயணமாக மட்டுமே கொள்ளாமல் தான் கடந்து செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தன்னார்வ நிறுவனங்களில், உலக சமாதானம் மற்றும் அன்பு குறித்த தான் கண்ட தெரிந்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் லுடோவிக்.

உசாத்துணை[தொகு]

எஸ். ராமகிருஷ்ணன். கோடுகள் இல்லாத வரைபடம். உயிர்மை பதிப்பகம். 2008

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுடொவிக்_ஹப்ளர்&oldid=2216479" இலிருந்து மீள்விக்கப்பட்டது