தரவுப்பொதி நிலைமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த தொழில் நுட்பமானது தகவல் பரிமாறிகளிடையே நெரிசல்காரணமாக தகவல் சென்றடைவதில் உண்டாகும் தாமதங்களை குறைப்பத்ற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.பொதுவாக ஓர் இடத்திற்கு உள்வரும் அல்லது வெளிச்செல்லும் தகவலானது முடிச்சுக்கள்(தகவல் பரிமாற்றிகள் பல சந்திக்கும் இடம்) உதவியுடனேயே பரிமாறப்படுகின்றன. ஆரம்ப தொழில்நுட்பத்தி ஒரு தகவலானது இரு முடிச்சுக்கள் இடையில் பயணிக்கும் போது ஒரு பாதையை மட்டும் பாவிப்பதன் காரணமாக தாமதம் ஏற்பட்டது. ஆனால் தரவுப்பொதி நிலைமாற்றம் மூலமாக ஒரு தகவல் இரு முடிச்சுக்களை பல பாதைகளினூடு பயணித்தபின் அடைவதன்மூலமாக தாமதம் தவிர்க்கப்படுகின்றது. ஒரு முடிச்சிலிருந்து அணிவகுக்கப்பட்ட ஒழுங்கமைப்பு மூமாக இடையறாத தொடரணியாக பல பாதையூடு பயணித்த தகவல்பொதிகள் மீண்டும் முடிச்சுக்களில் உருக்குலையாது ஒன்றுசேரும் முறையானது (தரவுப்பொதி நிலைமாற்றம்) தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு திருப்பு முனையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவுப்பொதி_நிலைமாற்றம்&oldid=1497795" இலிருந்து மீள்விக்கப்பட்டது